சிம்மம் (ஜூன் மாத பலன்கள்)

சிம்ம ராசி : மகம், பூரம், உத்திரம்-1ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


இந்த மாதம் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.
அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

மகம்:
லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.

பூரம்:
தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நேரம். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்:
முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோபலம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு