2018 வருட ராசிபலன்: கடகம்

கடக ராசி – நிறைய யோசிக்கும் திறமையுடைய கடக ராசிக்காரர்களே நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த வருடம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். குரு கேந்திரம் பெற்றிருப்பதால் உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள் பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.