spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபிரஸ் ஸ்டிக்கருடன் வளைய வந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர்!

பிரஸ் ஸ்டிக்கருடன் வளைய வந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர்!

- Advertisement -

சென்னை புறநகர்ப்பகுதியில் பிடிபட்ட ரெளடிகள் தாங்கள் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த கார்களிலும் டூவீலர்களிலும் Press என்றும் Highcourt Advocate என்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இவ்வளவு நாட்களாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவி வலம் வந்து கொண்டிருந்துள்ளனர்..

தான் சார்ந்திருக்கும் professional க்கான symbol, logo போன்ற ஸ்டிக்கர்களை சிலர் வாகனங்களில் முன்னும் பின்னும் ஒட்டிக்கொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் அரசு வழங்கப்பட்ட வாகனங்கள் அல்லாது, தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட வாகனங்களில் பயணிக்கும்போது அரசுத்துறையில் பணிபுரிவதால் நெம்பர் பிளேட்டில் G என்று போட்டுக்கொண்டு செல்கின்றனர். காவல்துறை சார்ந்தவர்கள் Police என்ற ஸ்டிக்கர்களை தங்களது சொந்த வாகனங்களில் பயன்படுத்துகின்றனர். இதுலேயும் சில தவறுகள் நடக்குது. அப்பா அல்லது மாமா, சித்தப்பா யாராச்சும் டிபார்ட்மென்ட்ல வேலையில் இருப்பாங்க. ஆனா அவங்களோடு உறவினர் தன்னோட வாகனத்தில் இப்படி ஒரு ஸ்டிக்கர் ஒட்டிகிட்டு போறதும் உண்டு.

இதில் DR, Police, Defence, Airforce, Lion இவை எல்லாம் ஓரளவு நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் Advocate, Press,Media போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு செல்பவர்களில் பெரும்பாலானோர்கள் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். இந்த மூன்றிற்கும் காவல்துறை மத்தியில் சற்று மரியாதை உண்டு. இந்த ஸ்டிக்கர்களை பார்த்தால் போக்குவரத்து காவலர்கள் மடக்குவதற்கும் அபராதம் போடுவதற்கும் யோசிப்பார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் சில சமூக விரோதிகள், வழிப்பறி திருடர்கள், கொலை மற்றும் கொள்ளைக் குற்றவாளிகள், வண்டிகளுக்கு உண்டான டாக்குமென்ட்ஸ் ஏதும் இல்லாதவர்கள் எல்லாம் இந்த மூன்று ஸ்டிக்கர்களை தைரியமாக பயன்படுத்திக்கொண்டு ரோடுகள்ல போய்க்கிட்டு இருக்காங்க.

குறிப்பாக Press, Media எனும் ஸ்டிக்கர் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. ஊடகத்துறைக்கு அரசு சார்ப்பில் வழங்கப்படும் ஸ்டிக்கர்களைத்தான் வாகனங்களில் பயன்படுத்தவேண்டும். அதற்கு தலைமைச் செயலகத்தில் தனிப்பிரிவே உள்ளது. அங்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்தந்த ஊடகங்களின் பணியாளர்களுக்கு ஏற்ப செய்தி சேகரிக்கும் நிருபர்கள், கேமிரா மேன்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஸ்டிக்கர்களை பயன்படுத்திக்கொள்ள லாம். இதுதான் சட்டம். மீடியாக்களுக்கான விதிமுறையும் கூட. ஆனால் ஏதோ ஒரு ஊடகத்தில் கடைநிலை ஊழியராக வேலை செஞ்சுகிட்டு இருக்கற ஒருத்தர் ஸ்டிக்கர் கடையில் Press என்ற ஸ்டிக்கரை வாங்கி தனது வாகனத்தில் ஒட்டிக்கொண்டு ரோடுகள்ல போய்க்கிட்டு இருக்கறதை தடுக்க அரசும் முயற்சிக்கலே. காவல்துறையும் தீவிரமா கண்காணிக்காம இருக்கு..

இதுவாவது பரவாயில்லை. ஏதோ ஒரு ஊடகத்தில் வேலை செய்கின்றார், அவர் Press என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு தனது வாகனத்தில் போகின்றார் என்பதில் ஒரு லாஜிக் இருக்குன்னே விடலாம். ஆனா ஒரு சாதாரண பிரின்ட்டிங் பிரஸ்ல பைண்டிங், கட்டிங் வேலை செய்யறவங்க எல்லாம் Press எனும் வார்த்தையை தவறாக புரிந்துகொண்டு தானும் பிரஸ்லதான் வேலைசெய்யறோம், அதனால இந்த ஸ்டிக்கர் ஒட்டிகிட்டு போனா தைரியமா போகலாம்கிற எண்ணம் வந்து அவர்களும் இந்த ஸ்டிக்கர்களோடு வாகனங்களை ஓட்டிகிட்டு இருக்காங்க..

ஒருவருடைய வாகனத்தில் முறையான ஆவணங்கள் இருந்தால், அந்த நபர் சரியாக வாகனத்தை செலுத்தினால் மேற்சொன்ன அடையாளங்கள் குறிப்பாக தவறான முறையில் பயன்படுத்தப்படும் Press, Advocate, Media போன்ற அடையாளங்கள் அந்த நபருக்கு தேவை இல்லையே..

PRESS என்பதற்கு எப்போதோ நான் ஒரு டெபினிஷன் ‍படித்ததாக நியாபகம். அதாவது P for Public, R for Royal, E for Education, S for Sound, another S for Sight. இவைகளை ஒன்றிணைப்பதுதான் PRESS என்கின்றார்கள். இந்த டெபினிஷன் உண்மையோ தவறோ லாஜிக்படி பார்த்தால் இந்த அடையாளச் சொல்லுக்கான அர்த்தம் சரியாகவும் பொருத்தமாகவும் இருப்பதாகவே தோன்றுகின்றது.

Media, Press, Advocate போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு சாலைகளில் செல்லும் வாகனங்களை காவல்துறை கண்காணிப்பதில் தவறில்லை. அரசும் செய்தித்துறை சார்பில் வழங்கப்படும் ஸ்டிக்கர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற ஒரு கெடுபிடியை கொண்டுவரவேண்டும். இல்லை என்றால் குற்றச் செயல்கள் புரிவோர்கள் இந்த ஸ்டிக்கர்கள் போர்வையில் வலம் வந்துகொண்டுதானிருப்பார்கள்..

இதுதவிர அந்தந்த ஃபுரொபஷனில் இருப்பவர்கள் இப்படி தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு செல்ல வாகனப்போக்குவரத்து சட்டத்தில் இடமுள்ளதா என்பதை சட்ட வல்லுநர்கள் இங்கே தெளிவுபடுத்தினால் நல்லது..

– சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வரும் கருத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe