spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனை2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி!

2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி!

- Advertisement -

2008ல் உலகமே வீழ்ந்தபொழுது இந்தியா மட்டும் எப்படி எழுந்தது என்பதிற்கு அகிலேஷ் யாதவ் அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார், அது முற்றிலும் உண்மை. அப்போது இந்தியா எழுந்தது இணை பொருளாதாரத்தினால் மட்டுமே.

அது என்ன இணை பொருளாதாரமென்றால் கருப்பு பணத்தினால் ஏற்பட்ட இணை பொருளாதார மேம்பாடுதான் அது.

அது சரியான முன்னேற்றம் அல்ல என்பதிற்கு பல சான்றுகள் உள்ளன, 2008க்கு பிறகான உட்கட்டமைப்பு எந்த அளவிற்கு உயர்ந்தது? உலகம் வீழ்ந்த நிலையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் வாய்ப்பு குறைவே.  நீங்கள் கூறியபடி கச்சா எண்ணை வானளவு. இந்த சூழலில் இந்தியா மட்டும் எழுந்ததிற்கு இந்த நேரம் சரியான காரணமிருந்தால் அதனை கூறியிருக்கலாமே, கடந்த அரசு? ஏன் கூறாமல் அதனை பேச மறுக்கின்றது?

காரணம் என்னவெனில், மொத்த கருப்பு பணமும் வெளி வர ஆரம்பித்தது, இது முதலில் ரியல் எஸ்ட்டேட் மூலம் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டது.

இதன்மூலம் பல புராஜெக்ட்டுகள் பெயரளவில் போடப்பட்டு, அந்த பகுதியில் இருந்த விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டன. இன்றளவும் ஒவ்வொரு மாநகரத்திலும் 2009ம் ஆண்டு போடப்பட்ட புதிய புராஜெக்ட்டுகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவை அனைத்துமே இன்று புல் புதர் மண்டிக்கிடக்கின்றது. உடனே இந்த அரசு கைவிட்டுவிட்டது என்று கூறாதீர்கள். 2009ல் இருந்து முழுமையாக 5 ஆண்டுகள் இதே உத்தமர் மன்மோகன் தான் பிரதமர். ஆனாலும் ஒரு திட்டமும் சொன்னபடி வரவில்லை. ஆனால் அந்த புராஜெக்ட்டுகளைக் காரணம் காட்டி அனைத்து இடங்களும் பலமாக விற்றுத்தீர்ந்தது. பல விவசாயிகள் தங்கள் நிலத்தினை விற்று புது பணக்காரர்கள் ஆனார்கள்.

இது இந்தியா முழுமையும் நடந்தது. இதற்கு ஏற்ப 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தினைக் கொண்டுவந்து விவசாயம் செய்யமுடியாதபடி திட்டமிட்டு காய் நகர்த்த, நல்ல விலை கிடைக்க ஏன் விவசாயம் என்று பலர் பணத்தினை வாங்கி பணக்காரர்கள் ஆகினர். இதனால் இவர்கள் வாங்கும் திறன் திடீரென அதிகரிக்க..

அடுத்ததாக கட்டுமானத்துறைக்கு இந்த பணம் கைமாறியது, வீட்டில் இருந்து அடுத்தது எப்ஃம்சிஜியில் இந்த பணம் கைமாற, அடுத்தது ஆடம்பரப் பொருட்கள் இப்படி பணம் சுற்ற ஆரம்பிக்க, அந்த நேரமிருந்த ப.சி யும், பொருளாதார மேதை மன்மோகனும் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்க்க, இந்திய பொருளாதாரமே போலியாக ஏற்றிக்காட்டப்பட்டது.

இதன் விளைவு என்ன தெரியுமா? 2009ல் இந்தியா முழுக்க பல போலி நிதிநிறுவனங்கள் தோன்றி பணம் சூறைவிடப்பட்டது, 30% வட்டி என்று கொள்ளையடித்தனர் பணத்தினை. சாதாரணமாக 4000ம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் எனக்கு சும்மா இருந்தாலே இவ்வளவு பணம் கிடைக்கிறதே நான் ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று யோசிக்கும் அளவிற்கு பணம் பாய்ந்தது.

குறைந்த பட்ச சம்பளம் உயர்ந்தது, பல ஜவுளிக்கடல்கள் திடீரென முளைத்தன. இப்படி பல பல நிகழ்வுகள். ஆனால் இப்படி புஸ்ஸென்று கிளம்பிய சோடா பாட்டில் கேஸ், 2012ம் ஆண்டே பொங்கி வடியத் துவங்கியது, வேலை வாய்ப்புத் திண்டாட்டம் 2012லியே ஆரம்பித்து விட்டது. இந்த பொருளாதார மேதைகளின் முட்டாள்தனத்தினால், பண வீக்கம் தாறுமாறாக ஏற, ஒரு கட்டத்தில் ப.சி அப்போதைய ஆர்பிஐ கவர்னரிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்திய ரூபாயின் மதிப்பும் தாறுமாறாக வீழ்ந்தது, வங்கியின் மூலம் இவர்கள் அள்ளித் தெளித்து மக்கள் பணத்தினை சூறையாடியதின் விளைவு வராக்கடன் அதிகரித்தது, இந்திய கையிருப்பு மிகவும் குறைந்தது. உண்டா இல்லையா?

வேங்கடேஸ்வரன் ஹரீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe