ரூ.75 லட்சம் கேட்டு ’அந்த’ படங்களை வெளியிடுவதாக நடிகையை மிரட்டியது உண்மையே

திருவனந்தபுரம்:

ரூ. 75 லட்சம் கேட்டு, தராவிட்டால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவேன் என்று மலையாள நடிகையை மிரட்டியது உண்மைதான் என்று அவரது முன்னாள் காதலன் ஒப்புக்கொண்டுள்ளார்.

மலையாள திரைப்பட நடிகை மைதிலி, படத் தயாரிப்பு நிர்வாகியான கிரண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். கிரண்குமார் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவரவே, கிரண்குமாருடன் இருந்த தொடர்பை முறித்துக் கொண்டார் நடிகை மைதிலி. இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு மைதிலி தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கிரண்குமார் மிரட்டி வந்துள்ளார். ஆனால் அவரது மிரட்டலை மைதிலி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த கிரண்குமார், ரூ.75 லட்சம் பணத்தைக் கொடுக்காவிட்டால் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மீண்டும் மிரட்டியுள்ளார். அதையும் மைதிலி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடவே, அவர் தாம் சொன்னது போல் சில தினங்களுக்கு முன் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை மைதிலி, கேரள காவல் துறையிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல் துறையினர், கிரண் குமாரைக் கைது செய்தனர். பின் கிரண்குமாரின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ’மைதிலியிடம் ரூ.75 லட்சம் பணம் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்ததால் என்னுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டேன்’ என கிரண்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து நடிகையர், நடிகர்கள் என சுற்றிச் சுற்றி வரும் குற்றச் சம்பவச் செய்திகளால் கேரளத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: