ராமேஸ்வரம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

  ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள
  அப்துல்கலாம் தேசிய நினைவகத்தினை அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமானஜூலை
  27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்சியில்
  பிரதமருடன், மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட
  பல்வேறு மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் முக்கியப்
  பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். ஜூலை26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும்
  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாலை மார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து
  ராமேஸ்வரத்திற்கோ அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கோ
  செல்வதைத்தவிர்க்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா
  முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: