வைத்யநாதாய ஸ்வாஹா: ஆண்டாள் கட்டுரையின் தொடர் வினை!

<

p dir=”ltr”>

<

p class=”gmail_signature”>

<

p dir=”ltr”>

வைத்யநாதாய ஸ்வாஹா

<

p style=”font-size:12.8px”>

(ஆஸ்திகப் பெரியோர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்)

தற்போதைய வைரமுத்து விவகாரத்தில் ஆஸ்திகப் பெருமக்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர், சிலர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களும் செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். இது குறித்து சில கருத்துகளைப் பணிவுடன் முன்வைக்க விரும்புகிறேன்.

வைரமுத்துவின் கருத்து புறக்கணிக்கத் தக்கது

சாக்கடையில் வாழும் ஜந்து ஏன் நாற்றத்தைத் தேடுகிறது என்று யாராவது யோசிக்கிறோமா? வைரமுத்து போன்றவர்களும் அதைப் போன்றவர்களே! இவர்களுக்கு ஆண்டாளைப் பற்றிப் பேசும்போதுகூட தேவதாசித்தனம் தேவைப்படும். எனவே, வைரமுத்து போன்றவர்களைப் பொருட்டாக மதித்து ஆஸ்திகப் பெரியவர்கள் வீதிக்கு வருவது நாய் வாலை நிமிர்த்தும் முயற்சிக்கு ஒப்பானது.

திரு. ஹெச். ராஜாவின் கண்டனமும் புறக்கணிக்கத்தக்கதே

குஜராத்தி மட்டுமே தெரிந்த ஒருவனிடம் தமிழில் பேசுவதால் பயனில்லை. அவனிடம் குஜராத்தி மொழியில் மட்டுமே பேச வேண்டும். திரு. ஹெச். ராஜாவின் பேச்சும் அத்தகையதே. அவர் வைரமுத்துவுக்கு வைரமுத்து பாஷையில் மறுமொழி அளித்திருக்கிறார். ஆஸ்திக அன்பர்களுக்கு அத்தகைய பாஷை புரியாது, புரிய வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, திரு. ஹெச். ராஜாவின் கருத்துகளும் ஆஸ்திகர்களால் புறக்கணிக்கத் தக்கவையே.

<

p style=”font-size:12.8px”>வைணவப் பெரியவர்களின் கண்டனங்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்
ஆன்மிகம் என்பது சரணாகதியை மையமாகக் கொண்டது. ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்பது உரிமையை வலியுறுத்துவதற்கான கண்டன அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் பணிவின்மையை வளர்க்கின்றன. ஆன்மிகப் பெரியவர்களும் இத்தகைய வழிமுறைகளைக் கைக்கொள்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இது சாமானிய மக்களிடம் பணிவின்மையையும்  ஒழுங்கீனத்தையும் வளர்க்கும்.

<

p style=”font-size:12.8px”>மாற்று வழி உண்டு
வைரமுத்து போன்ற அண்டா குடுகுடு டண்டா பானிக்கள் தமிழகத்தில் கவிஞர்களாக உலா வர முடிவது எப்படி என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். துரியோதனனின் ஜீவஸ்தானம் அவனது துடைகளில் என்பது பாரதம் கூறும் தகவல். வைரமுத்து போன்ற பிருஹஸ்பதிகளுக்கு சமுதாய அங்கீகாரம் கிடைக்க முடிவதும் அதுபோன்றதே. திரு. வைத்தியநாதன் போன்ற பண்பட்ட, தரமிக்க ஆஸ்திகப் பெரியவர்கள் வைரமுத்து போன்றவர்களுக்கு வழங்கும் அங்கீகாரம்தான் இத்தகைய பிரகிருதிகளுக்கு சமுதாயத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது. பூஜ்ய ராஜாஜியின் அங்கீகாரம் இல்லாவிட்டால் தமிழகத்தில் தீய சக்திகள் வேரூன்றி இருக்க முடியாது. திரு. வைத்தியநாதன் போன்றவர்களின் செய்கையும் அத்தகையதே. எனவே, கண்டிக்கப்பட வேண்டியது வைத்தியநாதனைப் போன்ற பண்பாளர்கள்தான், தினமணி போன்ற நேர்மையான ஊடகங்கள்தான்.

இதில் இரண்டு நன்மைகள் உண்டு.

1. அற்பர்களுக்கு மேலோர் அங்கீகாரம் கிடைக்காமல் போனால், சமுதாயத்தில் அற்பத்தனம் சுருங்கி விடும். எனவே, திரு. வைத்தியநாதன் போன்றவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் வைரமுத்துகள் தலையெடுக்க முடியாது. இது சமுதாயத்துக்கு நிரந்தர நன்மை பயக்கும்.

2. திரு. வைத்தியநாதன் அவர்கள் பண்பாளர், இலக்கியவாதி, பரம ஆஸ்திகர். அவரிடம் வைணவப் பெரியவர்கள் பண்பட்ட மொழியில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த முடியும். இது ஆஸ்திகப் பெரியவர்களுக்கு அழகு சேர்க்குமே தவிர, எந்த வகையிலும் இழுக்கு ஏற்படுத்தாது. 

<

p style=”font-size:12.8px”>ஜனமேஜயன் காட்டும் வழி
திரு. வைத்தியநாதனைப் போன்றவர்கள் ஆஸ்திக அன்பர்களின் உணர்வுகளை மதிக்காமல் போக வாய்ப்பு இல்லை. ஒருவேளை மதிக்காவிட்டால்….?

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், இருக்கவே இருக்கு ஜனமேஜயன் வழி.

தக்ஷகனைக் கொல்வதற்கு ஜனமேஜயன் யாகம் நடத்துகிறான். மந்திரங்களைச் சொல்லி தக்ஷகாய ஸ்வாஹா என்று ஆஹுதி செய்கிறான். மந்திர வலிமைக்கு தக்ஷகன் யாகத்தீயில் வீழ்ந்து சாம்பலாகி இருக்க வேண்டும். ஆனால், அவனோ இந்திரனைச் சரணடைந்து விட்டான். இந்திர சிம்மாசனத்தின் அடியில் பதுங்கி இருக்கிறான். அங்கே கிடைத்த காப்புச் சக்தி அவனைக் காக்கிறது. விஷயம் அறிந்த ஜனமேஜயன், இந்திராய ஸ்வாஹா என்று ஆஹுதி செய்கிறான். தலைகுப்புற யாகத்தீயை நோக்கி விழுகிறான் இந்திரன்.

வைரமுத்து போன்றவர்களுக்குத் திரு. வைத்தியநாதன் போன்றவர்கள் இனிமேலும் அடைக்கலம் கொடுத்தால், ஆஸ்திக அன்பர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வைத்தியநாதாய ஸ்வாஹா சொல்ல வேண்டியதுதான். ஆஸ்திகப் பெருமக்களும், இலக்கியவாதிகளும் திரு. வைத்தியநாதனையும் தினமணியையும் அடியோடு புறக்கணித்தால் போதும்.

திரு. வைத்தியநாதன் அவர்களுக்கோ, தினமணி நிர்வாகத்துக்கோ இந்த பாஷை புரியாமல் போகாது.

அன்பன்,

வேதா டி. ஸ்ரீதரன், (அரங்கமா நகருளானே, காரேய் கருணை ராமாநுஜா நூல்களின் ஆசிரியர்)