spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநால்வர் கலகம் நன்மையில் முடியும்

நால்வர் கலகம் நன்மையில் முடியும்

- Advertisement -

காங்கிரஸ் திட்டம் பிசுபிசுப்பு….

இழுத்த இழுப்புக்கு வராத தலைமை நீதிபதியை பதவியிழக்கை வைக்க 5-நட்சத்திர-மாஃபியா வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் திட்டம் பிசுபிசுப்பு….

#நால்வர்கலகம்நன்மையில்

சகிப்பின்மை போராட்டம், முற்போக்குகளின் அவார்டு வாப்ஸி போராட்டம், மாணவர்கள் போராட்டம், சிறுபான்மை பயத்தில் வாழ்கிறார்கள் என்று போராட்டம்,
பீஃப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், ஜிக்னேஷ் மேவானி போன்றோரை கொண்டு போலி-தலித் போராட்டம் என அத்தனை போராட்டங்களும் தோற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கயவர்கள் கையிலெடுத்திருப்பது நீதிபதிகள் போராட்டம்.

>இந்த போராட்டமும் சொதப்பி, மோடிக்கு சாதகமாவதை எப்படி தாங்குவார்கள் கயவர்கள்…. ‘ராகுல் காந்தி இதை அரசியலாக்க கூடாது’ என்று ராகுலை குறிப்பிட்டு பார் கவுன்சில் அறிக்கை விட்டிருப்பது சிறப்பு (செருப்படி).

மாநிலம் முழுதும் பயன் தரக்கூடிய ஒரு நர்மதா அணையை கட்டுவதற்குள் பல இன்னல்களை மோடி அடைந்தார் – குஜராத் முதல்வராக இருந்த போது. அந்த திட்டம் வரவிடாமல் தடுத்தது ஒரே ஒரு நபர்: மேதா பாட்கர்.

  • மேதா பாட்கர் அமெரிக்காவில் $ பெற்று நர்மதாவுக்கு எதிராக போராட்டங்களையும் வழக்கையும் நடத்தியனார். அந்த விவரங்கள், அவர் தனது அமெரிக்க என்.ஜி.ஓ தலைவருக்கு எழுதிய இமெயில் மூலம் வெளியானது. சர்ச்சையை கிளப்பியது. இது போக, அந்த வழக்கில் நீதிமன்றம் விலைபோன விவரங்களும் அந்த இமெயிலில் குறிப்பிட பட்டிருந்தது.

நர்மதா வழக்கில் மேதா பாட்கருக்கு சாதகமாக தீர்ப்பளித்தவர் அல்த்தமஸ் கபீர்.
இவர் பிற்காலத்தில், தான் ஓய்வு பெறும் நாளில். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகி, நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்தார் – மேதா பாட்கருக்கு எதிராக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு குஜராத் காங்கிரஸ் MP கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்க படாததற்கு சோனியா காரணம்.

ஒரு தனி நபரால் ஒரு மாநிலமே பயனடைய முடியாமல் செய்ய முடிந்தது.

இந்த 5 நீதிபதிகளில் ஒருவர் சோனியாவால் உருவாக்கப்படடவர் ,, இன்னொருவர் மேகாலயா காங்கிரஸ் முன்னாள் முதல்வர் மகன் அதுவும் சோனியா அல்லக்கைதான் ,, இன்னொருவர் கம்னியுஸ்ட், ( கம்னியுஸ்ட், என்றால் கேக்கவே வேண்டாம் நாட்டு நலன் சார்ந்தவராக இருக்க மாட் டார், இன்னொருவர் ஓய்வு பெற போகிறவர் ,,

  • ஃபோர்டு ஃபௌண்டேஷன் $ வாங்கி இயங்கிய என்.ஜி.ஓ சோனியா கைக்கூலி தீஸ்தாவுக்கு மும்பை நீதிமன்றம் கைது ஆணை பிறப்பிக்க, அதை எதிர்த்து தொலைபேசி அழைப்பு மூலம் உச்சநீதிமன்ற பெயில் வாங்கித்தந்த கபில் சிபலுக்கு ( அந்த அளவுக்கு செல்வாக்கு உள்ள கபில் சிபல் ) அதே உச்சநீதிமன்றத்தில் பழைய ‘மரியாதை’ இல்லை என்று கதறுகிறார் .

ராம்ஜன்ம பூமி வழக்கில் ராமர் கோவிலுக்கு எதிராக ஆஜராகும் கபில் சிபல் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவிடம், ‘நீங்கள் அக்டோபரில் ஓய்வு பெறுகிறீர்கள். அதற்குள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. எனவே, வழக்கை 2019 தேர்தலுக்கு பின் விசாரிக்க ஒத்தி வையுங்கள்’ என்று சொல்ல, பதிலுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, ‘நான் கேட்டு முடித்து விடுவேன். வழக்கு ஒத்தி வைக்கப்பட மாட்டாது’ என்றதோடு, சிபலை பல முறை கண்டித்தும் பேசினார். இது கபில் சிபலுக்கு மிகவும் மரியாதை குறைவாக நினைக்கிறார்

ஏனென்றால் ராமர் கோவில் தீர்ப்பு அளித்து விட்டால் அது 2019 தேர்தலில் பிஜேபி க்கு சாதகமாக்கி விடும் என்பதனால் காங்கிரஸ், கம்னியுஸ்ட் கடும் எதிர்ப்பு செய்கிறார்கள் ,, ஏனென்றால் தீபக் மிஸ்ரா மோடி காலத்தில் பதவிக்கு வந்தவர்

  • ராம் மந்திர் வழக்கில் கண்டிக்கப்பட்ட இன்னொரு மூத்த வழக்கறிஞர் தவான், ‘எனக்கு மரியாதை இல்லை. நான் வக்கீல் தொழிலை விட்டே போகிறேன்’ என்றார் (திரும்பி வந்தார் என்பது வேறு விஷயம்)

மேலும் பிரதாப் பூஷன் என்ற வழக்கறிஞர் ,இவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வாதாடுபவர் இந்த பிரசாந்த் பூஷனுக்கு ரூ 25 லட்சம் அபராதம் விதித்தார் தீபக் மிஷ்ரா.

இது போன்ற செயல்களால் தொலைபேசியில் பெயில் வாங்கும் கபில் சிபல், நடு இரவில் தீவிரவாதிக்காக தலைமை நீதிபதி கதவை தட்டும் தீவிரவாத ஆதரவு, ஹிந்து விரோத, ஆக்டிவிஸ்ட் வக்கீல்கள் இந்திரா ஜெய்சிங், பிரசாந்த் பூஷன், ராஜிவ் தவான் போன்றோருக்கு ‘பழைய மரியாதை’ இல்லை.

  • மூத்த வழக்கறிஞர்களையும் வரிசையில் வர சொல்கிறார் மிஷ்ரா. . மூத்த வழக்கறிஞர்கள் என்பதற்காக அவர்கள் வழக்கை முந்தி கேட்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுநல வழக்கு ஒருவர் போட்டால் அந்த வழக்கை நன்கு ஆராய்ந்து அதன் அவசியம் என்ன என்று கேட்டு அது நாட்டு நலன்களுக்கு எதிராக இருந்தால் அந்த பொதுநல வழக்குகளை ஒழிக்க முயல்கிறார் தலைமை நீதிபதி. மிஸ்ரா,,
தலைமை நீதிபதியின் இந்த முயற்சிக்கு சட்ட அமைச்சும் ஆதரவு தெரிவித்துள்ளது. ,, இது இவர்களுக்கு எரிச்சல்

பொதுநல வழக்குகள் இல்லாமல் போனால், பல ஆக்டிவிஸ்ட்டுகளின் பிரபலத்துவமும் பறி போய்விடும் எனபதால் டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி, கபில் சிபல், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் உட்பட பலரும் எதிர்க்கிறார்கள் இந்த திட்டத்தை.

எனினும், இந்த பொது நல வழக்குகள் இனி தலைமை நிதிபதியால் சரி பார்க்க பட்ட பின்னர் நாட்டு நலனுக்கு எதிராக இல்லாத பட்ச்சத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்ற நிலை வர போவது நிச்சயம் என்றே தெரிகிறது .

இது போக….

1 – ராம ஜன்ம பூமி.
2 – ஆதார்.
3 – 1984 சீக்கிய படுகொலை.
4 – சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாயிருக்கும் வழக்கறிஞர்கள், சட்ட பயிற்சியை கைவிட வேண்டும்,
5- வழக்குகளில் ஆஜராக கூடாது என்ற வழக்கு.
6 – அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுமதி.
7 – அரசியல் வாதிகள் போன்ற உயரிய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வேண்டுகோள்

இதுவெல்லாம் காங்கிரஸ் கட்சி விரும்பாத செயல்கள்,, ஏனென்றால் அவர்கள் குடும்பமே 6 வழக்குகளில் சிக்கி உள்ளது ,, இது மிக பெரிய தலைவலியை உருவாக்கி விட்டது

லாலு பிரசாத் இரண்டாவது வழக்கிலும் தண்டனை. மூன்றாவது நான்காவது வழக்குகள் முடிவு விரைவில் (மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் உள்ள 90+ வழக்குகளில் வழக்குகளில 6 வழக்குகள் லாலுவுக்கு எதிராக ).

….. என பல முக்கிய விவகாரங்கள் இந்த ஆண்டில் முடிவுக்கு வரவிருக்கின்றன.

முத்தலாக் விவகாரத்தில் தோற்ற காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் உள்ளிட்ட போலி செக்குலர் கூட்டம், ‘ராமர் கோவில் வராமல் தடுத்தால் சிறுபான்மை வாக்கு வங்கியை உறுதி செய்து கொள்ளலாம்’ என அந்த வழக்கை தடுக்க பெரும்பாடுபட்டு வருகின்றன.

இந்த ஊழல் கூட்டத்திற்கு தீபக் மிஷ்ரா சரிப்படமாட்டார் என்பதால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வரைக் கொண்டு ஊடகங்களை சந்திக்க ஏற்பாடானது.

“ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது” என்று கூறிய இந்த நால்வர், காங்கிரஸ் ஆலோசனை படி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் ஊடகங்களுக்கு வழங்கினர்.

பிரச்சினை என்னவென்றால், சில வழக்குகளை விசாரிக்க இந்த நால்வரும் ஆர்வம் காட்டுகின்றனர். தலைமை நீதிபதியோ அந்த வழக்குகளை மீதமுள்ள 20 நீதிபதிகளுக்கு நியமிக்கிறார் – அவருக்கு அளிக்கப்பட்ட உரிமை அது.

இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இந்த நால்வரும், “எங்களுக்கே அந்த வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டனர்.

தலைமை நீதிபதி அந்த வழக்குகளை இதர நீதிபதிகளுக்கு ஒதுக்குவது குற்றம் என்றால், அந்த குறிப்பிட்ட வழக்குகளை நாங்களே விசாரிக்க வேண்டும் என்று இவர்கள் கோருவது மிகப்பெரிய குற்றம். இவர்களுக்கு அந்த வழக்குகளில் ஏன் தனிப்பட்ட ஆரவம்?

காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் இந்த நால்வரை ஆதரிக்கின்றன. இந்த நால்வருக்கே அந்த வழக்குகளை ஒதுக்குங்கள் என்று கேட்பது இந்த கூட்டத்தின் பின்புலம் யார் என்பதை உறுதி செய்வதோடு, ‘ராகுல் காந்தி இதை அரசியலாக்க கூடாது’ என்று ராகுலை குறிப்பிட்டு பார் கவுன்சில் அறிக்கை விட்டிருப்பது சிறப்பு (செருப்படி) .

பல சொதப்பல்கள்.

நால்வரும் ஊடகங்களை சந்தித்த போது, அந்த நால்வரின் பின்னும் ஊடக வியாபாரி சேகர் குப்தா நின்று அவர்களிடம் கிசு கிசுத்தது,

ஊடக கூட்டத்திற்கு நடுவே வழக்கறிஞர் – ஆக்டிவிஸ்ட் இந்திரா, ஜெய்சிங் வந்தது, ஊடகத்தோடு ஊடகமாக இந்திரா ஜெய்சிங்கும் கேள்வி கேட்டது,

சொதப்பல்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, டேனியல் ராஜா சென்று நீதிபதி சலமேஸ்வரை சந்தித்து அது நிருபர்களின் கேமராக்களில் பிடிபட்டது

ஜனநாயகம் செத்துவிட்டது என்று சொன்ன இந்த நால்வரும், ஜனநாயக முறைப்படி தங்கள் பிரச்சினையை தீர்க்க எந்த முயற்சியும் செய்யாதது வெட்கக்கேடு.

இவர்கள் தங்கள் பிரச்சினையை தீர்க்க, சட்ட அமைச்சகத்தை நாடவில்லை.

அவர்களின் திட்டம் முழுதும் பாழானது.

பிற நீதிபதிகளையும் கூடி விசாரிக்கவில்லை.

ஜனாதிபதி கோவிந்தை இவர்கள் நாடவில்லை.

இத்தனையையும் விட்டு ஊடகங்களை நாடியது ஜனநாயக முறையில்லை.

ஆக இவர்கள் எதிர்பாராத வகையில் பல சொதப்பல்கள்.

1997இல், உச்சநீதிமன்றத்தில் வகுத்த நீதிமன்ற நெறிமுறையில் 16 விஷயங்கள் முடிவு செய்யப்பட்டன. அதில் இரண்டு விஷயங்களில் ஒன்று, ‘நீதிபதிகள் பொதுவிவாதத்தில் ஈடுபடக்கூடாது’ என்பது. அதன்படி, நீதிபதிகள் ஊடகங்களை சந்திப்பது தடை செய்யப்பட்ட ஒன்று.

முன்னாள் அட்டார்னி ஜெனரல் உள்ளிட்ட பலரும் இந்த நால்வருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்த நால்வரில் தவறை உணர்ந்த இருவர் இப்போது வெளிவந்து, ‘எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது. எவ்ரிதிங்க் இஸ் நார்மல்’ என்று மழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர்களது போராட்டதின் மூலம், உச்சநீதிமன்றத்தின் வெளிப்படைத்தன்மையற்ற, நமக்கு-நாமே நீதிபதிகள் நியமன திட்டம் ‘கொலீஜியம்’ மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உறவினர்களும் ஆதரவாளர்களும் எப்படி நீதிபதியாகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

மோடி அரசு பதவிக்கு வந்ததும் கொண்டு வந்த முக்கியமான சட்டம் – நீதிபதிகள் நியமனத்தை சரிசெய்யும் – தேசிய நீதிமன்ற நியமன குழு சட்டம். அந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்து, அந்த சட்டம் செல்லாது என தள்ளுபடி செய்து கொலீஜியத்தை தொடர்ந்தது உச்சநீதிமன்றம்.

இப்போது இந்த நால்வரும் தொடுத்த போர்க்கொடி, மீண்டும் கொலீஜியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதோடு, தேசிய நீதிமன்ற நியமன குழுவிற்கு உயிர் கொடுக்க வாய்ப்பாக அமைகிறது.

நால்வர் கலகம் நாட்டுக்கு நன்மையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வரும் வாரங்களில் கொலீஜியம் நிலைமை என்னவாகும் என்று தெரியும்!

> நீதித்துறையின் வெளிப்படை தன்மையை அதிகரிக்க, அதை கணினிமயமாக்க மோடி அரசு எடுத்த முடிவுகளை முன்னாள் தலைமை நீதிபதி டாக்கூர் தடுத்தார்.

அவரையடுத்து வந்த கேஹர் ஆதரவோடு அந்த திட்டம் பெருமளவில் – கீழ் கோர்ட்டுகளில் – நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீதிபதிகளின் – எத்தனை வழக்குகள், எத்தனை தீர்ப்புகள், ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு காலம் எடுத்து கொண்டார் – என விவரங்கள் பகிரப்படுவதால், இந்த நீதிபதிகள் வரும்காலங்களில் பதவி உயர்வளிக்கப்படும்போது அவரது தரம் வெளிப்படையாக தெரியும்.

#நால்வர்கலகம்நன்மையில்
#நீதிபதிகள்போராட்டம்
#கொலீஜியம்
முடிவுகாலம்
#மீண்டும்NJAC
#தேசிய
நீதிமன்றநியமனகுழு

Selvam Nayagan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe