ஜிஎஸ்டி தாக்கம்: திருப்பதி தேவஸ்தான விடுதிக் கட்டணம் உயர்ந்தது

tirupathi

திருப்பதி:

ஜிஎஸ்டி., வரி விதிப்பினை அடுத்து, திருப்பதி தேவஸ்தானத்தின் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமண மண்டபத்துக்கு உரிய கட்டணம், கோவிலில் விற்கப்படும் தங்க டாலர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டியில், ரூ.1000 முதல் ரூ.2000 வரையிலான விடுதிக் கட்டணம் மீது 12% வரை வரியும், ரூ.2000க்கு மேற்பட்ட விடுதிக் கட்டணம் மீது 18 % வரியும் தேவஸ்தானம் வசூலித்து வருகிறது. திருப்பதி கோவில் மண்டபத்தில் நடக்கும் திருமணத்துக்கான கட்டணம் ரூ.10,000 மீது 18 % வரை வரி வசூலிக்கப்படுகிறது. கோவிலில் விற்கப்படும் தங்க டாலர் விலையுடன் 3 சதவீதம் சேர்த்து ஜிஎஸ்டி வரியுடன் விற்கப்படுகின்றன. இதனால் இவை அனைத்திலும் சற்று விலை உயர்வு காணப்படுகிறது.

இருப்பினும், ஜிஎஸ்டியில் இருந்து திருப்பதி கோயில் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: