8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சிக்கு வருகிறது வேட்டு!

புது தில்லி:
8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்று கொண்டு வரப்பட்ட முறை இனி கைவிடப்பட்டு, மறு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தோல்வி அடையாமல் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்த நடைமுறையின் காரணமாக, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இம்முறையைக் கைவிட வேண்டும் என்றும் 24 மாநில அரசுகள் அண்மையில் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டன.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, கட்டாயத் தேர்ச்சி முறையைக் கைவிட கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கு கடந்த 3ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில்  இந்தத் திருத்த மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா தாக்கல் செய்தார். இதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளின் ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை மாநில அரசுகள் ‘பெயில்’ ஆக்கலாம். அதற்கு முன்பு அவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: