ஆதார் அட்டை இல்லை என்றதால் மாணவரை அடித்த ஆசிரியர்

மாணவனை அடித்த ஆசிரியர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ள போலீஸார், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மும்பையில் ஆதார் அட்டை இல்லை என்றதற்காக 10ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்துள்ளார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, கட்கோபாரில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலிஷ் ஹை ஸ்கூலில், தன்னிடம் ஆதார் அட்டை இல்லை என்றான் மாணவன் சுஹைல் அன்சாரி. இதைக் கேட்ட ஆசிரியர் ஷ்யாம் பகதூர் விஸ்வகர்மா தன் கையில் வைத்திருந்த கட்டையால் மாணவரின் தலையில் அடித்துள்ளார். இந்தக் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகி உள்ளன. இதில் காயமடைந்த மாணவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.

மாணவனை அடித்த ஆசிரியர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ள போலீஸார், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: