இந்தியாவின் கொள்கையானது லாபம் நஷ்டம் பார்த்து அமைவதில்லை: பிரதமர் மோடி

டெல்லியில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பிரிதொரு நாட்டின் வளத்தை ஆக்கிரமிப்பு செய்யும், மற்றொரு நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கமானது இந்தியாவிடம் இருந்தது கிடையாது என்று கூறியவர், இந்தியாவின் கொள்கையானது லாபம் நஷ்டம் பார்த்து அமைவதில்லை. மனிதாபிமான மதிப்பீட்டை கொண்டே அமைவதாகவும் கூறியுள் ளார். மேலும் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றும் கூட்டாளி களாகவும், ஊக்கம் அளிப்பவர்களாகவும் செயல்படவேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டுள் ளார். மாநாட்டில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ் கயானா உள்பட 23 நாடுகளை சேர்ந்த 124 எம்.பி.க்களும், 17 மேயர்களும் கலந்துக் கொண்டனர்.