பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்: உள்துறை அமைச்சகம் கோரிக்கை

குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைவரும் பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது. காகித கொடியை போன்று பிளாஸ்டிக் கொடிகள் மக்கிப்போவது கிடையாது. அவற்றை இயற்கையான முறையில் அப்புறப்படுத்தவும் முடியாது. அவை நீண்ட நாட்கள் மக்காமல் இருக்கும்.  தேசியக் கொடியின் கண்ணியத்தை காக்கும் வகையில் எளிதில் மக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவையை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.