குலசை தசரா விழா கோலாகலம்; நாளை சூரசம்ஹாரம்!

30ந்தேதி நாளை சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் நள்ளிரவில் சிதம்பரேஸ்வர்கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் விரதமிருந்து பலவேடங்கள் அணிந்த பல லட்சம் முத்தாரம்மன் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரப்பட்டினத்தில் பல
லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் வரும் 30ந்தேதி இரவு 12 மணிக்கு
பலலட்சம் பக்தர்கள் முன்பு மகிஷா சூரசம்ஹார விழா நடக்கிறது.

துாத்துகுடி மாவட்டம் திருச்செந்துார் தாலுகாவில் குலசேகரப்பட்டிணத்தில்
பிரசித்தி பெற்ற பழமையான தசரா விழா கொண்டாடப்படும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்தாரம்மன்கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தியாவில் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக பலலட்சம் பேர் கூடும் இடம் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன்கோயில்..

மூவுலகிற்கும் நாயகியான முத்தாரம்மன் அம்மையும் அப்பனுமாக காட்சிதரும்
திருக்கோயில்.உடலில் தோன்றும் முத்துக்களை ஆற்றுவதால் முத்தாரம்மன் என்றும்
முத்து ஆரங்களை சாற்றுவதால் முத்தாரம்மன் என்ற திரு பெயரால் வழிபாடு செய்யப்படுகிறது.

முத்தாரம்மன் அம்மையும் அப்பனுமாக ஒரே சன்னதியில் காட்சி தருவது இங்கு
மட்டுமே…மனித வாழ்வில் செய்வினை மற்றும்மனநோய் தீர்க்கும் திருக்கோயிலாக
உள்ளது.

முற்காலத்தில் வரமுனி என்ற முனிவர் வாழ்ந்த காலத்தில் அப்போது அங்கு வந்த
அகத்திய முனிவரால் சாபத்திற்கு உள்ளாகி எருமை தலையும் மனித உடலும் பெற்ற
வரமுனி மகிஷா சூரனாக மாறினார்.பின்னர் முனிவர்களுக்கு தொல்லை கொடுத்ததால் முனிவர்கள் பராசக்தியை வேண்டியவுடன் மகிஷாசூரனை அழித்த வரலாறுக்குரிய கோயிலாகும்.

இக்கோயிலில் கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அன்று முத்தாரம்மன் துரக்கையாகவும்
22ந்தேதி விஸ்வகர்மேசுவரராகவும்,
23ந்தேதி பார்வதியாகவும்,
24ந்தேதி பாலசுப்ரமணியராகவும்,
25ந்தேதி நவநீதகிருஷ்ணராகவும்,
26ந்தேதி மகிசா சூரமர்த்தினியாகவும்,
நேற்று 27ந்தேதி ஆனந்த நடராசராகவும்,
28ந்தேதி கஜலட்சுமியாகவும் .
இன்று 29ந்தேதி கலைமகளாகவும் காட்சி கொடுக்கிறாள்…
இந்நிலையில் வரும் 30ந்தேதி நாளை சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் நள்ளிரவில்
சிதம்பரேஸ்வர்கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் விரதமிருந்து பலவேடங்கள் அணிந்த பல லட்சம் முத்தாரம்மன் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

பல லட்சம் பேர் வந்து வழிபட்டு செல்லும் கோயில் விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்சோதி உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் இராமசுப்ரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: