கத்தியுடன் மாணவர்கள்! அச்சத்துடன் பள்ளி மாணவிகள்! கண்டு கொள்ளாத காவல் துறை!

கத்தியுடன் மாணவர்கள் அட்டகாசம்!

அச்சத்துடன் வீட்டிற்கு செல்லும் பள்ளி மாணவிகள்!

கண்டுக் கொள்ளாத காவல் துறை!

சென்னை, சூளை ராட்லர் தெருவில் சென்னை மாநகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளி (
பாலையா நாயுடு ) உள்ளது.

இப்பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். மாலை
4.30 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் மாணவிகள் வீட்டிற்குள் செல்லும் போது,
முன்னதாக மாணவ பட்டாளம் இரண்டு சக்கர வாகனத்தில் வலம் வந்து கிண்டல் கேலியும்
செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதை பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்டால் அவர்களை தாக்க வருவதால் பொதுமக்கள்
நமக்கு ஏன் வம்பு என பயந்து செல்கின்றனர்.

தற்போது பையில் கத்தியுடன் வலம் வருகின்றனர். இதனால் காதல் விவகாரத்தில்
எவரேனும் போட்டு தள்ள முயல்கிறார்களோ என மக்கள் பேசி வருகின்றனர். சில
தினங்களுக்கு முன்பு பணியில் இருந்த பெண் போலீசை அக்கும்பல் கிண்டல்
செய்துள்ளது. ஆவேசம் அடைந்த அந்த பெண் போலீஸ் தான் வைத்து இருந்த லட்டியை
எடுத்து அக்கும்பலை ஓட செய்தார்.

ராட்லர் தெரு, ஏ.பி.ரோடு சந்திப்பில் ஏகப்பட்ட மாணவர்கள் மாலையில் பைக்குடன்
மாணவிகளுக்காக காத்து இருப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்படு கிறது.

சம்மந்தப்பட்ட வேப்பேரி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: