இங்கு பேட்டி எடுத்தால் நடவடிக்கை! பத்திரிகையாளர்களை மிரட்டிய இணை கமிஷனர்!

சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில், வீடுகள் திடீரென
இடிக்கப்பட்டன. இதனை, பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க சென்றனர்.

பாதுகாப்பு பணிக்காக, இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார்
குவிக்கப்பட்டனர். வீடுகள் இடிக்கப்பட்டால், கடலில் குத்தித்து போராட்டம்
நடத்துவோம் என மீனவ பெண்கள் அறிவிப்பை தொடர்ந்து தான், அங்கு போலீசார்
குவிக்கப்பட்டனர்.

அப்போது, பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட வடசென்னை இணை கமிஷனர் சுதாகர்
அங்கு வந்தார். அந்த இடத்தில், பாதிக்கப்பட்ட மக்களை பேட்டி எடுக்க
பத்திரிகையாளர்கள் சென்றனர்.

இங்கு பேட்டி எடுத்தால், நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டும் தொணியில் இணை
கமிஷனர் சுதாகர் பேசினார். இதனால், பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட்ட இணை கமிஷனர், அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு
போராட்டமும், பத்திரிகையாளர்களால் தான் கலவரமாக மாறியதாக அவர் தெரிவித்த
கருத்தும் அதிரிச்சியை தந்தது.

எப்போதும், பத்திரிகை யாளர்களிடம் விரோதப்போக்கை கடைபிடிக்கும் இணை கமிஷனர்
சுதாகர் செயல் கண்டிக்கதக்கது என வடசென்னையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலர்
தெரிவித்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: