ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தோறும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கு அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வழிகாட்டுதல் படிதான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவிற்கு இந்திய விலங்குகள் நல வாரியத்து முன்னாள் உறுப்பினர் எஸ்.கே மிட்டல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் கால்நடை வளர்ப்புத்துறை சார்பில் ஒருவரும் நியமிக்கப்படுவார். அத்துடன் கோஹர் அசிஸ் (பாரத விலங்குகள் காப்பகம்), வினோத் ஜெய்ன், தினேஷ் பாபா, சித்தார்த், ஷ்ராவான் கிருஷ்ணன், பிரகாஷ் சாஷா, அந்தோனி ராபின், வள்ளியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.