டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம்

டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.10 கூடுதலாக விற்றால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருவாய் உள்ள டாஸ்மாக் கடைக்கு பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.