ஆளுநர் உரை குழப்பம் உள்ளது வேதனைக்குரியது: ஸ்டாலின்

சட்டப்பேரவையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைகுறித்து தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஆளுநர் உரையின் பக்கம் 4-ல் முதல் மற்றும் இரண்டாவது வரிகளில் நிதி மேலாண்மையில் தமிழ்நாடு அரசு மிகப் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதே பக்கத்தில் 14-வது வரியில் ‘கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது’ என்று உண்மையை ஒப்புக் கொண்டிருக் கிறார்கள் என்று கூறியுள்ளார். இதன்மூலம் தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலை மீதும் 80,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த பேராபத்திலிருந்து எப்படி மீளப் போகிறோம் என்பதைப் பற்றி எந்தவித கொள்கை அறிவிப்பும் இந்த ஆளுநர் உரையில் இல்லை என்பது வேதனைக்குரியது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.