போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் ஒருவாரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியது. காலதாமதம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக பயணிகள் செல்லலாம் என்றும் அண்ணாநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, தாம்பரம் சானிடோரியம், வண்டலூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறியுள்ளனர்.  சென்னை யிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 34 விமானங்களிலும் மக்கள்  கூட்டம் அலைமோதுகிறது.  2 நாட்களுக்கு எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லாததால் அவசரத்திற்கு செல்லும் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.