spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன?

தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன?

- Advertisement -

சென்னையில் ஜன. 23ம் தேதி நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அனைவரையும் போல் எழுந்து நிற்காமல், தமது பீடத்தில் அமர்ந்தவாறே கண்களை மூடி தியானத்தில் இருந்தார். ஆனால் அவரது செயல் தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தாயை அவர் அவமதித்து விட்டார் என்று கண்டனங்களைக் கூறி வருகின்றனர். அவருக்கு எதிராக போலீஸில் புகாரும் அளிக்கப் பட்டது.

இந்நிலையில், தமிழ்த் தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை என்ன சொல்கிறது? என்பதைப் பார்க்கலாம்…

இந்தப் பாடல் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் என்ற தமிழறிஞரால், கி.பி. 1891ல் எழுதப் பட்டது. அவர் எழுதிய ‘மனோன்மணீயம்’ என்ற நாடக நூலில் அவர் தமிழ் மொழிக்காக ஒரு வாழ்த்துப் பா பாடியிருந்தார்.

தமிழகம் பின்னாளில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்று, தமிழக அரசுக்காக ஒரு அதிகாரப் பூர்வ பாடல் வேண்டும் என்று தேடினார்கள். 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, இந்தப் பாடல் தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

ஆனால் அப்போது இந்தப் பாடலில் சில வரிகள், கருணாநிதி உள்ளிட்டவர்களால் நீக்கப் பட்டது. இந்தப் பாடலில் சில வரிகள், வடமொழிக்கு ஆதரவாக உள்ளன என்று கூறி ஒரு சிலரும், எதிர்ப்பாக உள்ளன என்று ஒரு சிலரும் பிரச்னை செய்தனர்.

அந்தப் பாடலில், ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாத உன் சீரிளமைத் திறம்… என்று வரும் வரிகளை ஏற்கத் தயங்கினர். ஆரியம் எனும் சம்ஸ்க்ருதம் போல், உலக வழக்கு அழியாமல் இளமையுடன் தமிழ் திகழ்கிறது என்ற வார்த்தையை ஏற்க அப்போதுதான் புதிதாக அரசுக் கட்டிலில் ஏறியிருந்த திமுக., ஏற்க மறுத்தது. இதனால், குறிப்பிட்ட சில வரிகளை நீக்கிவிட்டே அது அரசின் அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்,
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்…” ஆகிய ஐந்து வரிகள் அதில் இருந்து நீக்கப்பட்டன.

குறிப்பாக, கடவுள் வாழ்த்தாக மனோன்மணீயம் சுந்தரனார் இந்தப் பாடலைப் படைத்திருந்தார். எல்லையறு பரம்பொருளின் தன்மையைப் பாடியிருந்தார். தமிழ் மொழி தாயாக இருந்து, அதிலிருந்து கன்னடமும் தெலுங்கும் துளுவும் மலையாளமும் குழந்தைகளாக உதித்தன என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய ஓர் அரசு, அப்போது தனது நாத்திகக் கொள்கைகளைத் திணிப்பதற்காக, பரம்பொருள் குறித்து வந்த வரிகளை நீக்கி பாரபட்சம் காட்டியது.

இருப்பினும், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. இந்தப் பாடலை அரசு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கடவுள் வாழ்த்தைப் போல்  தமிழ் அன்னை வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும், இதனை விழாவின் துவக்கத்தில் வாழ்த்துப் பாவாகப் பாடவேண்டும், முடிவில் அல்ல என்றும் குறிப்பிட்டது. இந்த ஆணையில், பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்றோ, அவமதித்தால் இதுதான் தண்டனை என்பது குறித்தோ எந்தத் தகவலும் குறிப்பும் இல்லை.

thamizthaivazthu

In the Government order cited, orders were issued that the piece from “Manonmaneeyam” written by Thiru P.Sundaram Pillai mentioned therein should be sung as a prayer song at the commencement (and not at the end) of all functions organised by Government Department, Local Bodies and educational institurions.

The Government now direct that the above prayer song should be sung in the Rag “Mohoanam” and in the Thisra Tala as composed by Thiru M.S.Viswanathan. A copy of the song with the swaras as composed Thiru M.S. Viswanathan is appended to the order of guidance.

T.V. Venkatraman
Joint Sectretary to Government

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe