செங்கல்பட்டு அருகே கரும்பாடி அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அம்மன் கோயிலில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

செங்கல்பட்டை அடுத்த கடும்பாடி அம்மன் கோயிலில் நேற்று இரவு நிர்வாகிகள் கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். அதிகாலையில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி கிரிடம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.