ரஜினி ஒரு 420: தொடர்ந்து விமர்சிக்கும் சுப்பிரமணிய சுவாமி!

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த், கேசினோவில் சூதாடுவதை விட்டுவிட்டு இலங்கைக்குச் சென்று தமிழக மீனவர்களை மீட்க முடியுமா என்று சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு 420 என தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, மீண்டும் ரஜினியை தனது டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். இது, அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க இலங்கை அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியசாமி, நடிகர் ரஜினிகாந்த், கேசினோவில் சூதாடுவதை விட்டுவிட்டு, இலங்கைக்குச் சென்று மீனவர்களைக் காப்பாற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் பதில் அளித்துள்ளனர். தனிப்பட்ட வகையிலும் அவரை விமர்சித்து பல டுவிட்டர் பதிவுகள் அவரது பக்கத்தில் ரசிகர்களால் பதியப்பட்டுள்ளன.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: