எடப்பாடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓபிஎஸ்!

panneerselvam-tn

சென்னை:
ஊழல் நிறைந்த அரசு என்று ஓபிஎஸ் வர்ணித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

இதுவரை திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில அரசை எதிர்த்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் என நடத்தியுள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு ஓர் ஊழல் அரசு என்று கூறி, அரசுக்கு எதிராக ஆர்ப்பாடம் நடத்தவுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அந்த நாளில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மக்கள் பிரச்னையை முன்வைத்து தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறி, ஆர்ப்பாட்டத்தை பெரிய அளவில் ஒன்று திரட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதுமுள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கெனவே கமல் ஹாசன், திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள், போதாக் குறைக்கு அமைச்சர்கள் மீதான வருமான வரி சோதனை என்று தள்ளாடும் மாநில அரசுக்கு, ஒரு பக்கம் தினகரனால் நெருக்கடி, இன்னொரு புறம் ஓ.பி.எஸ். அணியால் தலைவலி என உருவாகியுள்ளது. இவ்வாறு எடப்பாடி அணியினர் கடும் சவாலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: