அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

edappadi-dinakaran-panneerselvam

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தான் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படாத நிலையில், கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தினகரன் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.டி.வி.தினகரன், ‘‘தீவிர கட்சிப் பணியில் ஈடுபடவுள்ளேன். வரும் 5ஆம் தேதி கட்சி அலுவலகம் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்’’ என்றார். எனவே, தினகரன் விதித்த கெடு இன்றுடன் முடிவுக்கு வருவதால், அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக கட்சியினரிடையே பரப்பான சூழல் காணப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: