ஷூவை கழற்றுமாறு உதவியாளரை அறைந்த நடிகர் பாலகிருஷ்ணாவால் அதிர்ச்சி!

Balakrishna-whacks-assistant-forces-him-to.jpg

ஹைதராபாத்:
தான் அணிந்திருந்த ஷூவைக் கழற்றுமாறு தனது உதவியாளரை திடீரென அறைந்தார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இந்தச் சம்பவத்தை அருகில் இருந்து பார்த்தவர்களும், வீடியோவில் கண்டவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. இவர், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். இவர் தான் நடிக்கும் 102ஆவது படத்தில் நடிக்க, ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்தார். அந்த நேரம் உள்ளே பூஜை நடந்து கொண்டிருந்ததால், காரில் இருந்து வெளியே இறங்கினார் பாலகிருஷ்ணா. பூஜை நடக்கும் இடத்துக்கு வந்த பாலகிருஷ்ணா, திடீரென தனது உதவியாளரை அழைந்தார். அருகில் வந்த அவரை ஓர் அடி கொடுத்து, தனது காலைக் காட்டினார். அதைப் புரிந்து கொண்ட அந்த உதவியாளர் குனிந்து அவரது ஷூவைக் கழற்றி வைத்தார். இது அருகில் இருந்தோரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தவர்கள், அதனை பொது வெளியில் பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

சக நடிகர்களை கிண்டல் செய்வது, அவமரியாதையாகப் பேசுவது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாலகிருஷ்ணா இப்போது உதவியாளரை அறைந்து மேலும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: