spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சனீஸ்வர பகவானின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

சனீஸ்வர பகவானின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

- Advertisement -

நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இதைப்போன்ற அரிய தகவல்கள் நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?

அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.

இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி.

அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் இது…

?தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

?உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.

வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்படைத்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

?காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசிகளா தெரியவில்லை!..

ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

?செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறை வேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்வழிபாடுதான்.

?உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி காக்கை இனம்.

?குடும்ப ஒற்றுமை வேண்டும்என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.

தன் உடன்பிறந்த வர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தகாணுப் பிடிபூ ஜையைச்செய்கிறார்கள்.

?திறந்தவெளியில் தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.

?அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து, ஏழு, ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடி அளவுஎடுத்துவைத்து, காக்கைகளை “கா…கா…’ என்று குரல்கொடுத்து அழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை ஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.

அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள் “கா…கா…’என்று கூவி தன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,

அந்தவாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,

வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்தி ருப்திப்படுத்தி யதாவும்கருதுகிறார்கள்.

காக்கை சனி பகவானின்வாகனம்.

காக்கைக்குஉணவுஅளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.

?காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.

காக்கையிடம்உள்ள தந்திரம்வேறு எந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.

எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்துமனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின்நிலையைஅறிவாராம்.

அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும்ச னியும்சகோதரர்கள்ஆவர். அதனால், காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

தந்திரமான குணம் கொண்ட காகம்காலையில்நாம்எழுவதற்குமுன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றிபெறும்.

நமக்குஅருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்லபலன் உண்டு.

வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால்அதற்கு உடனே உணவிடவேண்டும்

எனவே, காக்கை வழிபாடு செய்வதால்ச னிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுமன மகிழ்வுடன் வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe