அய்யாத்துரை ஸ்டாலின் ஆன கதை; ஆனால் ஸ்டாலினே விட்ட ‘கதை’ !

எப்படிய்யா ஒரு மனிதன் மறைவுக்கு நான்கு நாட்கள் முன்பே இரங்கல் கூட்டம் நடந்த முடியும். இது 1967 கிடையாது மக்களை ஏமாற்ற.

திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு விழா மண மேடையில் பேசும்போது, குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது குறித்துக் கூறுகிறார். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறும் அவர், தான் அவ்வாறு மற்றவருக்கு வலியுறுத்தும்போது, தனக்கு ஏன் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு கதையைச் சொன்னார்.

ஆனால் அது கதையாகவே ஆனதுதான் இப்போது நிஜமாக சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. காரணம், ஸ்டாலின் தனக்குப் பெயர் சூட்டக் காரணம் என்று சொல்லப் பட்ட சம்பவத்தில் வரலாற்று முரண் இருப்பதுதான்!

இதனை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று…
ஆக ஒருவர் இறப்பதற்கு 4நாள் முன்பேயே, இரங்கல் தீர்மானம் போட்டார் கருணாநிதி என “துண்டுச் சீட்டு” புகழ் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டிசம்பர் 15ஆம் நாள் குடியரசு தினம், ஜனவரி 15ஆம் நாள் சுதந்திர தினம், ஜனகண மண நாட்டுப்புறப் பாட்டு என்ற காமெடியின் வரிசையில் தற்போது மற்றொரு சீரியஸ் காமெடி. ஆக ஸ்டாலினின் மணிமகுடத்தில் மற்றொரு வைரக்கல்.

செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தது: மார்ச் 1 -1953
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்தது: மார்ச் 5 -1953
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தாராம். அதனைக் கேட்ட கருணாநிதி, அந்த மேடையிலேயே தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாக அறிவித்தாராம். அது தான் எப்படி?

எப்படிய்யா ஒரு மனிதன் மறைவுக்கு நான்கு நாட்கள் முன்பே இரங்கல் கூட்டம் நடந்த முடியும். இது 1967 கிடையாது மக்களை ஏமாற்ற.
#Again_துண்டு_சீட்டு_Fails என்று குறிப்பிட்டுள்ளார் ஒருவர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: