spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?நீரவ் மோடி என்ற கரப்பான் பூச்சி தனியாக இருக்காது; தோண்டத் தோண்ட வங்கியில் எவ்வளவு சிக்குமோ?

நீரவ் மோடி என்ற கரப்பான் பூச்சி தனியாக இருக்காது; தோண்டத் தோண்ட வங்கியில் எவ்வளவு சிக்குமோ?

- Advertisement -

காலம் மாறிவிட்டது. முன்பெல்லாம் நாட்டு நடப்பை பத்திரிகையில தெளிவா எழுதிடுவாங்க. அனேகமா நம்பலாம். இப்பல்லாம் நடப்பு என்னான்னு ரிசர்ச் பண்ணித்தான் தெளிஞ்சுக்க வேன்டி இருக்கு. ஆனா பலருக்கும் அது தேவையில்லை. குறிப்பா சோசியல் மீடியாவில். தெளிவா இருந்தாலே புரிஞ்சுக்காம பொங்கித் தள்ளறவங்களுக்கு… எப்படி இருந்தா என்ன?

இருந்தாலும் இந்த பிஎன்பி சமாசாரம் ரொம்பவே குழப்பி விட்டுடுச்சி. 11 ஆயிரம் கோடி நஷ்டம்ன்னு / ஊழல்ன்னு (பப்பு 22 ஆயிரம் கோடின்னு சொல்லறார்; அவருக்கு உள் சமாசாரம் தெரியும் போலிருக்கு!) பத்திரிகையில் எழுதினாங்க. ஆனா எப்படி நஷ்டம்ன்னு புரியாம இருந்தது. தெளிவாகவே சொல்லணும்னா…

முதல்ல நீங்க பிஎன்பில பணம் போட்டு இருந்தா அது பாதுகாப்பாத்தான் இருக்கு; அது அரசோட கேரண்டி. மோசடி 11000 கோடி இல்லை; குறைவாகவே இருக்கலாம்.
உண்மை குற்றவாளிகள் பேங்கோட டாப் மேனேஜ்மெண்டும் ஆடிட்டர்களும்தான். அவங்களுக்கு தெரியாம இது நடக்கவே முடியாது. கவலை தரும் விஷயம் இப்படி எல்லா பேங்குமே செய்யுது போல இருக்கு. லோகல் கவுன்சிலர் லஞ்சம் வங்கறான்னா, அட எல்லாரும்தான் வாங்கறாங்க, இது சப்ப மேட்டர் என்கிற அளவுக்கு போயிருக்கு.

பிஎன்பி ஸ்டாக் எக்ஞ்சேசுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி கடிதம் எழுதி 11000 கோடி அளவுக்கு தன் பேங்க்ல ப்ராட் நடந்து இருக்கிறதா சொன்னது. பிற 30 வங்கிகளுக்கு கடிதம் எழுதி இப்ப ரிடயர் ஆயிட்ட ஒரு ஊழியர் ஆறு வருஷமா போலி எல்ஓயூ கொடுத்துகிட்டு இருந்ததா தெரிவிச்சது.

ஒரு வங்கில கடன் வாங்கறோம். அவங்க நம்ம வரவு செலவு எல்லாம் பாத்துட்டு நல்ல ரிஸ்க் ன்னா கடன் கொடுப்பாங்க (அப்படின்னு பேரு!) பிறகு இன்னொரு வங்கில கடன் வாங்கறோம்.. முன்னே இந்த வங்கில கடன் வாங்கி இருக்கேன்னு சொன்னா அதிகம் விசாரிக்காம கடன் கொடுத்துடுவாங்க. அது போல மத்த வங்கிகளும் பிஎன்பி கொடுத்திருக்கேன்னு எல்ஓயூ கொடுத்து இருக்காங்க.

இதுல நிரவ் மோதியும் மெஹுல் சோக்சியும் பலனடைஞ்சதா சொல்லி இருக்காங்க. அடிப்படை கான்சப்ட் என்ன?

நான் வங்கிக்கு போய் வெளிநாட்டிலேந்து முத்து, வைரம் எல்லாம் வாங்கி வியாபாரம் செய்யப்போறேன். கடன் வேணும்ன்னு சொல்லறேன். நா நகைக்கடை வெச்சிருக்கேன்; நிறைய வியாபாரம் நடக்குது என்கிறது ஊர் அறிஞ்ச சமாசாரம்.

வங்கி சொல்றாங்க… ஓ தாராளமா தரோம். ஆனா வட்டி 10%.
நான் யோசிக்கிறேன். இல்ல, அது ரொம்ப அதிகம். கட்டுப்படி ஆகாது. ம்ம்ம் சரி வெளிநாட்டு கரன்சியாவே லோன் வாங்கிக்கறேனே? அட, எப்படியும் வெளிநாட்டில டாலர் கொடுத்துதானே வாங்கப்போறேன். வட்டி சகாயமா இருக்குமில்ல?

( London Interbank Offered Rate (LIBOR) 1.5 %. வங்கிக்கு 2%. எனக்கு மொத்தம் 3.5 % ல முடிஞ்சுடுமே? ஆனா என்னை அமெரிக்காவில யாருக்கும் தெரியாதே! யார் கடன் கொடுக்கபோறாங்க?)

அதனால பிஎன்பிகிட்ட சொல்லறேன்… பாஸ், எனக்கு வெளிநாட்டு வங்கில கடன் வாங்கி கொடுங்க. ஒண்ணுமில்ல. ஒரு எல்ஓயூ (Letter of Undertaking) கொடுத்தா போதும்.

வங்கி சொல்லும்… ரைட்டு. நூறு கோடி கடன் வாங்கித்தர எனக்கு பிணையா 110 கோடி சொத்து காட்டு!

இதோ ன்னு காட்டிட்டா கொடுத்துடுவாங்க. ஆனா, நடந்த விஷயமே இப்படி ஒரு பிணை இல்லாம எல்ஓயூ கொடுத்தாங்க என்கிறதுதான்!

வெளிநாட்டு வங்கி கடன் கொடுக்கும். ஏன் கொடுக்கணும்? அதுக்கு என்னை தெரியாது; அவசியமும் இல்லை. அது நம்பறது பிஎன்பி வங்கியை.

இப்படி நம்ப பிஎன்பி ஸ்விஃப்ட் என்கிற பிரத்யேக வங்கி செய்தி பறிமாற்ற வழியில இன்னாருக்கு 180 நாளுக்கு லிபோர் +2 % வட்டில 100 கோடிக்கு நாங்க கேரண்டி தரோம். ஆசாமி தரலைன்னா பிஎன்பி தந்துடும். அதனால கடன் கொடுப்பாங்க. அத என்கிட்ட தர மாட்டங்க. பிஎன்பி பேர்ல Nostro ன்னு ஒரு கணக்கில தருவாங்க. பிஎன்பி எனக்குத்தரும். தரும்ன்னா நேரடியா இல்ல. நா யார்கிட்ட முத்து வைரம் வாங்கறேனோ அவங்க பில்லை செட்டில் செஞ்சுடும். அது சரி, பிஎன்பி சும்மாவா இத செய்யும்? என்கிட்ட 2% கறந்துடுவாங்க.

ரைட்! நான் வியாபாரம் பண்ணி அந்த பணத்த கொண்டு பிஎன்பிகிட்ட கொடுத்தா, அவங்க அந்த வெளிநாட்டு வங்கிக்கு பணத்த செட்டில் பண்ணி கணக்க நேர் செஞ்சுடுவாங்க. இப்படித்தான் நேர்மையான பிசினஸ் நடக்கணும். ஆனால்…

நா வியாபாரம் செஞ்சு சம்பாதிச்சு அந்த பணத்தை ஸ்டாக் மார்கெட்ல போட்டு அம்போ ஆகலாம். இல்ல அந்த மாதிரி வேற எதாவது. அப்ப செட்டில் பண்ண வேண்டிய தேதியில காசில்லையே, என்ன செய்யறது?

பரவலா செய்யற ‘கடன் வாங்கி கடன் செட்டில்’ செய்யற சமாசாரம்தான் இது ஒரே வழி.

பிஎன்பி… அட ஏன்யா வேற யார்கிட்டயோ போற? என்கிட்டயே திருப்பி கடன் வாங்கு.

எப்படி?

இன்னொரு எல்ஓயூ தரேன்! இப்ப 100 கோடி கடனுக்கு 110 கோடி கடன்.

இதுக்கு டெக்னிகலா ரோலிங் ஓவர் க்ரெடிட் என்கிறாங்க. திருப்பித் திருப்பி இதை செய்யறது திருட்டுத்தனம்; வேற ஒண்ணுமில்லை. இந்த கடன் சீக்கிரமே குட்டி போட்டு போட்டு ரொம்ப பெரிசா ஆயிடலாம்.

ரைட்! இப்ப என்னதான் ஆச்சு?
இது ஊகம்தான்.

நிரவ் மோதி இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகளிலேந்து பிஎன்பி எல்ஓயூவை வெச்சு நிறைய கடன் வாங்கினார். இதுக்கு பிணை இல்லாம ஏற்பாடு செய்ய ஒரு வங்கி ஊழியர் ஸ்விஃப்ட் மூலமா செய்தி அனுப்பி உதவினார். இது கோர் பேங்கிங் சிஸ்டம்ல பதிவாகாமலே இருக்க பார்த்துக் கொண்டார். 2011 முதல் இப்படி க்ரெடிட் ரோல் ஓவர் நடந்தது. ஊழல் ஊழியர் 2017 ல ரிடையர் ஆனார். எல்ஓயூ பாக்கி ஜனவரி 2018ல வருதுன்னு புதுசா வந்தவர்கிட்ட ரோல் ஓவர் பண்ண கேட்டால்…

அவர்… “எப்படி செய்ய முடியும்? சிஸ்டம்ல கடந்த கால ட்ரான்சாக்‌ஷன் எதுவுமே இல்லையே!”ன்னார்.

இது போதாதா ஆட்டம் க்ளோஸ்ன்னு முடிவு செய்ய? நிரவ் ஓடிட்டார். அதனால 280 கோடி காணோன்னு எஃப்ஐஆர் பதிவு பண்ணாங்க.

யாரோ ஒருத்தர், யோவ், அவ்ளோதானா? பதிவில்லாத இந்த மாதிரி எல்ஓயூ எவ்வளோ பாருன்னார். அட! 11,000 கோடி!

ஏன் நிரவ் பணத்தை திருப்பிக்கொடுத்துட்டா போறது! என்ன பிரச்சினைன்னா…

அட… பிரச்சினை இல்லைன்னா முன்னேயே திருப்பி கொடுத்து இருப்பாரே? அது முடியலை போலிருக்கு. எதோ ஒரு சமயத்தில கைவிட்டு போன கேஸாயிடுச்சி.

பிணை வாங்கி இருந்தால் பிஎன்பிக்கு இது பிரச்சினையா இருந்திருக்காது; அப்படி வாங்கலை என்கிறதுதான் இந்த ஊழலே.

நீங்களும் நானும் கடன் கேட்டு போனா ஆயிரத்தெட்டு கேள்வி, டாக்குமெண்ட்ஸ், புலிப்பாலை கொண்டா என்கிறது போல டிமாண்ட்ஸ்…. ஆனா கோடிக் கணக்கிலேன்னா தேவையில்லை. ஏன்?

இங்கதான் இன்னைய வங்கி சிஸ்டத்தோட ஊழல் இருக்கு. ஆயிரத்தெட்டு கஸ்டமர்கிட்ட கடன் கொடுத்து ரிகவரிக்கு ஏன் கஷ்டப்படணும்? ஒரே ஆசாமி, பிசினஸ்மேனா பாத்து கொடுத்துட்டு லாபம் பாக்கலாமே? ஈஸி!

ஏன் கொடுக்கணும்? குறிப்பா மல்லையா பேருக்கு கொஞ்சம் பிணை கொடுத்துட்டு (ஏலம் விட்டும் கடனை தொகை ரெகவர் ஆகலை!) காணாம போன பிறகும்? அதான் பிசினெஸ் ரிலேஷன்ஷிப்!

பிஎன்பி கொடுக்கலைன்னா இன்னொருத்தன் கொடுப்பான். அவனில்லைன்னா இன்னொருத்தன். ஏன் நமக்கு கிடைக்கற லாபத்தை இன்னோருத்தன் கொண்டு போகணும்? ஸோ எல்லா வங்கிகளும் இப்படி செய்யுதுங்க!

கடன் ரொக்கத்தை (“fund based limit”) அடிப்படையா கொண்டது இல்லை. அதாவது பிஎன்பி பைசாவே கொடுக்கத்தேவையில்லை. கடன் வாங்கின ஆசாமி கொடுக்கத் தவறினாத்தான் பர்ஸையே திறக்கணும். அது வரைக்கும் கிடைக்கிற கமிஷன் முழுக்க லாபம்தானே?

இறக்குமதி தொழில் செய்யற பலரும் க்ரெடிட் ரோல் ஓவர் செஞ்சுகிட்டு இருக்காங்களாம். வங்கிகளும் பிணைக்கு 6 மடங்குக்கு எல்ஓயூ தராங்களாம். அதனால நாளைக்கே உம், எல்லாத்தையும் செட்டில் செய்யுங்கன்னு சொன்னா பிணையா இருக்கறது போறாவே போறாது! இந்த லயபிலிடியை ரிசர்ர்வ் வங்கிக்கு ரிபோர்ட் செய்யறதும் இல்லை!

பிஎன்பியோட இந்த முதலீடு இல்லாத கடன் 11000 கோடின்னு சொல்லறாங்க இல்ல? ஆனா கடைசியா அவங்க கொடுத்த பேஸ்லெ அறிக்கையில அதை சொல்லி இருக்காங்களான்னா இல்லை. காட்டி இருக்கறது ரத்தினங்களும் நகைகளும் என்கிற தலைப்பு… கீழ 2702 கோடி. குமாரசாமி கணக்கா இல்ல? இத ஐயா தெரியாதையான்னு சொல்லி சமாளிக்கலாம். அதான் கோட் பேங்கிங் சிஸ்டம்ல இது வரலையே?

ஊழியர்கள் செய்த ஊழலா இது? ரோல் ஓவரையும் க்ரெடிட்டையும் மறைச்சுட்டாங்களோ? ம்ம்ம்? இந்த அளவிலான ஊழல் உயர் மட்ட நிர்வாகத்துக்கு தெரியாம நடந்து இருக்குமா?

ஏன்யா, உன் நோஸ்ட்ரோ அக்கவுண்ட்ல 11000 கோடிக்கு கணக்கு ஏறுது, நீ பாக்காம இருக்கியா? அக்கவுண்டிங்க்ல எப்படி டேலி ஆச்சு? இவ்வளோ பணம் யாருக்காக எதுக்காக இங்க இருக்குன்னு யாருமா கேக்கலை? ஆடிட் செஞ்ச யாராவது கேட்டு இருக்கணுமே?

ஸ்விஃப்ட் மெசேஜிங் ப்ரத்யேகமானது. அது சாதா ஈமெய்ல் மெசேஜிங் போல இல்லை. நிறைய செக்யூரிடி உண்டு. ஏன் அதை யாரும் கண்காணிக்கலை. கோர் பேங்கிங் உடன் ஏன் அதை சரி பார்க்கலை? அதை பார்க்கப்போனா இன்னும் எத்தனை எலும்புக்கூடுகள் வெளிப்படுமோ?

இதுக்கு சமாதானம்: டாடா கோர் பேங்கிங் சிஸ்டத்தில என்டரி ஆகலை. அது சரி! ஆகியிருந்தா ரிபோர்ட் பண்ணணுமே!

எல்ஓயூ ஆத்தரைஸ்ட் இல்லை. அடடா! இவ்ளொ பெரிய தொகை? உயர் மட்ட நிர்வாகத்துக்கு தெரியாதுன்னு நம்பணுமா?

ஸ்விஃப்ட் சிஸ்டத்தை இல்லீகலா பயன்படுத்தினாங்க! ஏன் வங்கியோ அதோட ஆடிட்டர்களோ ஆர்பிஐயோ இதை கண்காணிக்காது? நம்பணுமா?

யோசிச்சா ரிடயர் ஆன ஊழியர் பலிஆடு போலிருக்கு. இன்னும் நிறைய பேருக்கு இது தெரிஞ்சே நடந்திருக்கணும். இவ்வளோ வருஷமா பிஎன்பிக்கு இதுல நல்ல லாபம் கிடைச்சது இல்லையா? இது இந்த ஒரு கேஸ்ல மட்டும் 200 கோடின்னு கணக்கு சொல்றாங்க.

இப்ப எல்லாத்தையும் பிஎன்பிதான் சரி கட்டியாகணும். யாரோ ஸ்விஃப்ட் சிஸ்டத்தை தவறா பயன்படுத்தினதா சொன்னாலும் பொறுப்பு பிஎன்பியோடது. முன்னே சொன்னா மாதிரி வெளிநாட்டு வங்கி நம்பினது ஆளை இல்லை; பிஎன்பியைத்தான்.
இதுல ஒரு தமாஷ் அந்த வெளிநாட்டு வங்கிகள் எந்த வெளிநாட்டுதும் இல்லை போலிருக்கு. அவங்களுக்கு பிஎன்பியோட க்ரெடிட் பத்தி தெரியுமாம். எல்லாம் வெளிநாட்டு இந்திய வங்கி கிளைகள்!

சரி அவ்ளோதானா? ஹும்! இது இந்த ஒரு அக்கவுண்ட்க்கு மட்டுமே! இன்னும் எவ்வளோ எல்ஓயூ இருக்கு! இன்னும் எத்தனை கம்பனிகள்! எல்லாரும் இதேதான் செய்யறாங்கன்னா எவ்வளோ பணம் புரளுது? இதை சரிக்கட்ட பிணையை சரியா கேட்டு வாங்குன்னா பேங்கிங் சிஸ்டம் குறிப்பா இம்போர்ட் அக்கவுண்ட் என்ன ஆகும்?

கரப்பான் பூச்சி எப்பவும் தனியா இருக்காதுன்னு ஒரு சொலவடை.
தோண்டத் தோண்ட என்ன வெளியே வரும் என்கறது கடவுளுக்கே வெளிச்சம். இந்த ஊழல் மாதிரி இன்னும் எத்தனை!?

கட்டுரை: வாசுதேவன் திருமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe