spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எலும்பு கூடு கடத்தல் சந்தை! சாலவாக்கத்தில் நடைபெறுவதும் இதுதான்!

எலும்பு கூடு கடத்தல் சந்தை! சாலவாக்கத்தில் நடைபெறுவதும் இதுதான்!

- Advertisement -

சாலவாக்கத்தில் நடைபெறுவதும். இதுதான்.

2007-ம் ஆண்டு அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையினை … முடிந்த வரை சுருக்கமாக தமிழாக்கம் செய்து இப் பதிவை இடுகிறேன்.

[ விபரங்கள் அனைத்துக்கும், அதன் பின்னணியில் உள்ள கடும் உழைப்பும், கட்டுரையை எழுதிய அமெரிக்க பத்திரிக்கையாளரையே சாரும்]

மனித எலும்புகளுக்கான உலக சந்தைக்கு இந்தியாவே கறுப்பு சந்தை.

உலக அளவிலான மனித எலும்புகளுக்கான தேவை.. பணம் காய்க்கும் மரமாக மனித எலும்புகளுக்கான சந்தையை உருவாக்கி உள்ளது. இது இன்று நேற்று உருவான சந்தையுமல்ல. 1500 களின் பிற்பகுதியில் இருந்து மருத்துவ வளர்ச்சியின் ஒவ்வொரு நகர்விலும், ஆராய்ச்சி + மருத்துவ கல்வியில் மனித எலும்புகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

கடந்த 160 வருடங்களுக்கும் மேலாக , இந்தியாவில் மனித எலும்பு வியாபாரத்திற்கான பாதை என்பது… கடைக்கோடி இந்திய கிராமத்திலிருந்து …உலகின் பல வேறு நாடுகளில் உள்ள புகழ் பெற்ற மருத்துவ கல்லூரிகளை சென்று அடைவது வரை நீடிக்கிறது.

வெள்ளை வெளேரென்று சுத்தப்படுத்தப் படும் மனித எலும்புக்கூடு + அதை முழுமையாக இணைப்பது வரை, சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மிகச் சரியாக வழங்குவதால், உலகளவில் …மனித எலும்புக்கூடு சந்தையில் இந்தியா தான் முக்கிய ஏற்றுமதி நாடு.

Chicago Tribune என்கிற அமெரிக்க செய்தித்தாள்,
1984-ம் வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 60,000 மனித எலும்புக்கூடுகள் ஏற்றுமதியானதாக செய்தி வெளியிட்டது. இந்த எண்ணிக்கை , வளர்ந்த நாடுக்ளில் உள்ள ஒவ்வொரு மருத்துவ மாணவரும் புத்தகங்களோடு 300 டாலருக்கு ஒரு மனித எலும்புக்கூடையும் வாங்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு போதுமானதாக இருந்தது !

அதே நேரம், 1985 மார்ச் மாதம், கல்கத்தாவில், 1500 குழந்தைகளின் எலும்புக் கூடுகளை ஏற்றுமதி செய்ததாக மனித எலும்பு வியாபாரி ஒருவர் காவல்துறையிடம் சிக்குகிறார். குழந்தைகளின் எலும்புக்கூடுகளுக்கு சந்தை மதிப்பு அதிகம் என்பதால், இக் குழந்தைகள் அனைவரும் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதாக இந்திய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. இதன் பின்னர், நடக்கும் அவலங்களை கவனித்து ,1985-ல் இந்திய அரசு , மனித எலும்பு ஏற்றுமதி சந்தைக்கு தடை விதித்து, அதை குற்றம் என அறிவித்தது. இதை அடுத்து , உலக எலும்புச் சந்தையே பெரும் சரிவை சந்தித்தது எனில், இந்திய மனித எலும்பு சந்தைக்கான உலக கிராக்கி புரிபடும்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தடை சட்டத்தை நீக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடின. இந்தியா மறுத்துவிட்டது. மேலும், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் மனித எலும்புகள் தரமான முறையில் தரப்படுத்தப் படாதவை என்பதாலும் இந்திய மனித எலும்புகளுக்கான சந்தை , அரசின் தடையை மீறி, மிகப் பெரும் கறுப்பு சந்தையாக உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவில் இந்த கறுப்பு சந்தையின் மையப் புள்ளியாக இருப்பது மேற்கு வங்காள மாநிலம். 2006-ம் வருடம், கல்கத்தாவிலிருந்து 80 மைல் தொலைவில், பாகிரதி நதிக் கரையில் இருக்கும் Purbasthali என்கிற ஊரில், மனித எலும்புகளை சுத்தப் படுத்தி சந்தையின் தேவைக்கு ஏற்ப தரப்படுத்தும் processing plant கண்டுபிடிக்கப் படுகிறது.

குவியல் குவியலாக மலை போல் மனித எலும்புகள் ! அருகாமை ஊர்கள் வரை சுற்றிலும் குடலைப் பிரட்டும் மனித உடலின் அழுகல் வாடை வேறு! 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்திருக்கிறது இந்த ! அதன் உரிமையாளர் முக்தி பிஸ்வாஸ். இறந்த உடல்களை எரிக்கும் சுடுகாட்டிலிருந்தும், புதைக்கும் இடுகாட்டிலிருந்தும் பிணங்களை திருடிய குற்றத்திற்கு கைதான இவர், அரசியல் தொடர்பு உள்ளவர் என்பதால் மறுநாளே விடுவிக்கப்பட்டு விடுகிறார்.

அந்தந்த உடலின் எலும்புகளை வேறு வேறு உடல்களின் எலும்புகளோடு குழப்பாமல், தனித்தனியாக முழு எலும்புக் கூடுகளாக கொடுப்பதால் , மருத்துவர்களின் preferred choice இந்த பிஸ்வாஸ். இவரிடம் வாங்கி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து, பிரேசில் என்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தவர்கள் Young Brothers என்கிற மருத்துவ உபகாரணங்களுக்கான விற்பனை நிறுவனம் . இந்திய அரசின் தடைக்கு பிறகும் 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவந்த இதன் உரிமையாளர் Vinesh Aron . இவரும், கைது செய்யப் பட்டு இரண்டே நாட்களில் விடுவிக்கப் பட்டுவிடுகிறார்.

வளர்ந்த நாடுகளின் மருத்துவ துறை : அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் , சேதப்படாத நன்கு தரப்படுத்தப் பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டின் விற்பனை விலை பல ஆயிரம் அமெரிக்கா டாலர்கள். அனைத்து மருத்துவ கல்லூரிகளும் மிகப் பெரிய அளவில் மனித எலும்புக்கூடுகள் தேவைப்படுகின்றன. செயற்கை முறையில் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப் பட்ட எலும்புக் கூடுகள் ஒரே மாதிரியைக் கொண்டு தயாரிக்கப் படுபவை என்பதால், மருத்துவ மாணவர்கள் அதன் மூலமாக ஒவ்வொரு மனித உடலுக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை.

உலக நாடுகளுடன் இணைக்கும் இந்த நீளமான மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தை வியாபாரத்தில்..இந்த சங்கிலியை இணைக்கும் முக்கிய கண்ணி… மருத்துவ உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் !
வாங்கி விற்கும் வேலையை இவை தான் செய்கின்றன.

உலகம் முழுவதும் மனித எலும்புக்கூடு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கனடா நாட்டை சேர்ந்த Osta International என்கிற நிறுவனம், இந்தியாவிலிருந்தே கருப்பு சந்தையில் எலும்புக்கூடுகளை வாங்குவதாக இதனை நடத்தும் Christian Ruediger கூறி இருக்கிறார். இந்நிறுவனத்தின் எலும்புக்கூடுகள், அமேசான் ஆன் லைன் விற்பனையிலும் கிடைக்கின்றன.

ஆக, இந்தியாவில் உள்ள அனைத்து விதமான மனிதக் கடத்தல்களுக்கும் பின்னால்… மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தையும் செயல்படுகிறது.

Banu Gomes

கட்டுரை: பானு கோம்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe