spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்84 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் காணும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்

84 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் காணும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்

- Advertisement -

கும்பாபிசேகம்:2-2-17

”கங்கை கொண்ட சோழபுரம் பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோயில்”.   ஆலயத் தொடர்புக்கு:97513 41108.   திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.   இந்தக் கோவிலை நிர்மாணித்தவர் ராஜேந்திரசோழன்.   தஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜசோழன் – திருபுவனமாதேவியின் புதல்வன்.  இவனது ஆட்சி காலமான 1012–1044 கடல் கடந்தும் சென்று நாடுகளைக் கைப்பற்றியதால் கடாரம் கொண்ட சோழன் என்ற பெயர் பெற்றார்.   தந்தை வழியில் ஆன்மீகத்தையும் பரப்பினார்.
இந்த கோவிலை உருவாக்கி கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீரை தன்னிடம் தோற்ற மன்னர்களின் தலையில் ஏற்றி இங்கு கொண்டு வரச்
செய்தான்.   மேலும் கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோவிலுக்கு உள்ளேயே கிணறு வெட்டச் செய்து,   அந்த புனித நீர் அங்கு வந்து சேரும் படி
நேர்த்தியாக ஏற்பாடு செய்தான்.

சிவதரிசனம் செய்ய வரும் பொழுதெல்லாம்,  இந்த புனித நீரை எடுத்து தலையில் தெளித்துபின்னர் வழிபாடு செய்தான்.  இங்கு விநாயகர் கையில் எழுத்தாணியுடன் காணப்படுகிறார்.   ராஜேந்திர சோழன் தன் அமைச்சரிடம்,   கோவில் பணிக்கு ஆன செலவுகள் என்ன என்று கேட்டவுடன் நினைவுக்கு வராததால் தடுமாறி பதறினார்.   இந்த விநாயகர் முன்னின்று வணங்க,   அனைத்து விபரங்களும் பளீரென நினைவுக்கு வந்ததாம்.   எனவே தான் இவர் கணக்கு
விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.  .

இங்கு லிங்கத்தின் அடியில் சந்திர காந்தக் கல் வைத்துள்ளனர் என்பதால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெப்பத்தைத் தந்து வருகிறது.  இங்கு மன சுமையோடு வரும் அடியவர்களின் வாழ்க்கையிலும் அனலை போக்கி,  குளிர்ச்சியை உண்டாக்குகிறார் பிரகதீஸ்வரர்.  .

தஞ்சைக்கு அடுத்து இந்த கோபுர விமானம் தான் தமிழகத்தில் பெரியது.  தஞ்சாவூர்க் கோயிலுக்குத் தந்தை அளித்த பல நேர்த்திகளை எல்லாம் மகன் தன் கோயிலுக்குத் திருப்பிவிட்டான் என்கிறார்கள்கங்கைகொண்ட சோழபுரத்தில் காணப்படும் சண்டேச அனுக்ரஹ மூர்த்தி வெகு சிறப்பு உள்ளது.  காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார்.   அருகில் பார்வதி.  .  .

சிவன் காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருப்பவர் : மாமன்னன் “இராஜராஜசோழனாவான்”.
மாமன்னன் இராஜராஜசோழனுக்கு [சிவபாதசேகரன்] என்னும் சிறப்பு பட்டம் உண்டு.   அதன் தோற்றம் தான் இந்த சிலை.  தன் தந்தையின் நினைவாக கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலில் அமைத்துள்ளார் இராஜேந்திரசோழன் என்பவர்களும் உள்ளார்கள்.  கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது.
விக்ரமசோழன் உலா,   இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன.

சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்த இடம் இது.   தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில்,   கங்கைகொண்ட சோழபுரம் கோயில்,
திருபுவனம் கோயில்,   தாராசுரம் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் சற்றொப்ப ஒரே மாதிரியான கலை வடிவைக் கொண்டவையாகும்.  கும்பகோணத்திலிருந்தும்,  அரியலூரில் இருந்தும் சுமார் 38கி.  மீ.   தூரத்தில் உள்ளது.  .  “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”.  .  ஆம்! உங்கள் வாழ்க்கையின் தீவினைகள்,  தீயவை அகன்று உங்கள் வாழ்வின் புரியாத ஓர் ஆனந்தம் புதிதாக ஆரம்பிக்கும் இத்தல தரிசனத்தால்.  .  .  .  “நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம’ எனப் பெற்றேன்?”.  “நேற்றைய வாழ்வு அலங்கோலம்,  அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,  வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,  அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,  எனக்கும் இடம் உண்டு,  அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்”.  .  .

கட்டுரையாக்கம்: சிவ.  அ.  விஜய் பெரியசுவாமி,
கல்பாக்கம்,  9787443462

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe