spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்விளம்பி வருடம் : விளம்பட்டும் கோடி நலன்களை!

விளம்பி வருடம் : விளம்பட்டும் கோடி நலன்களை!

- Advertisement -

14/04/2018 மங்களகரமான விளம்பி வருஷம் ஆரம்பம்

மலரும் மங்களகரமான ”விளம்பி” என்கிற புதிய ஆண்டு
14-4-2018 சித்திரை 1-ஆம் நாள் சனிக்கிழமை
வாக்கிய பஞ்சாங்கம்படி காலை 7.00 மணிக்கும்
திருக்கணித பஞ்சாங்கம்படி காலை 8.13 மணிக்கும் பிறக்கிறது…
எனவே 14-4-2018 அதிகாலை 3.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
விஷூ புண்ணிய காலமாகும்.

இந்த நேரத்தில் மருந்து நீர் (அருகம்புல்,மிளகு,கீழா நெல்லி வேர்) வைத்து நீராடி நீலம் /சிவப்பு நீற ஆடைகள் அணிந்து கடவுளை வழிபட்டு மங்களமாக மகிழ்வீர்களாக

சுப காரிய காலம்

14-4-2018 சித்திரை 1 சனி
காலை 11.00 முதல் 12.05 வரை
மதியம் 1.00 முதல் 2.00 மணி வரை
மாலை 6.20 முதல் 8.13 வரை

விளம்பி வருஷ வெண்பா

விளம்பி வருஷ விளைவு கொஞ்சம் மாறி
அளந்து பெய்யும் அரசர் – களங்கமுடன்
நோவால் மெலிவாரே நோக்கரிதாகும் கொடுமை
ஆவா புகல அரிதாம்

விளம்பி வருஷத்தில் அளவில்லா மகிழ்ச்சி பெற ஶ்ரீவேங்கடவனை வணங்கி அருள் பெறுக

பிறக்கப் போகும் இனிய விளம்பி புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் நொடி இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்

விளம்பியே வருக! வருக!!. விரும்பிய அனைத்தையும் அள்ளி தருக.!

எங்கள் இல்லங்களில் விவாகம் பல நடந்தேறுக

விழைந்தோர்க்கு விடை கிடைக்க வியக்கத் தக்க வகையில் அமையட்டும்

பகவான் ஸ்ரீராமர் பிறந்தது இந்த விளம்பி ஆண்டில்

தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 அதில் 32 வது வருடம்  விளம்பி ஆண்டு

எல்லோருக்கும் மங்களங்கள் உண்டாக பகவானை பிரார்த்திக்கிறோம்

சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என ஏன் கொண்டாடப்படுகிறது (14.4.2018)

ஜோதிட சாஸ்திரப்படி மேஷத்தில் பரணி என்ற நட்சத்திரத்தில் கிரகங்களின் அரசன் சூரியன் உச்சம் பெறுகிறார். அதைக் கருத்தில் கொண்டே சித்திரை மாதம் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

சூரியன் தனது பார்வையை பூமத்திய ரேகையில் செலுத்தும் இந்த காலத்தில சம அளவு வெப்பத்தை மகர ரேகை மற்றும் கடக ரேகை பகுதிகளிலும் செலுத்தும் என்பதும் இன்னொரு அறிவியல் சூட்சுமம் ஆகும்

இதில் இன்னொரு ஜோதிட சூட்சுமம் என்னவென்றால் கிரகங்களில் அதிக பலம் கொண்ட கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் தனது பயணத்தை தொடங்கி குறைவான பலம் கொண்ட புதனின் நட்சத்திரத்தில் தனது பயணத்தை முடிக்கிறது

இத்தகைய சிறப்பு கொண்ட சூரியன் பூமியில் இருந்து பார்க்கும் போது தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை மாத ஆரம்பத்தில் மேஷ ராசி மண்டலத்தில் இருக்கிறார். ஆதாவது பூமியின் நடுப்பகுதில் தனது ஒளிக்கதிர்களை செறிவாக செலுத்தும் காலம் இதுவே!

இதை வேறு விதத்தில் கூற பூமி சூரியனை சுற்றிவரும் நீள்வட்ட பாதையில் சூரியனை நெருக்கி செல்லும் காலம் என்றும் கூறலாம்

மேஷ ராசியில் இருக்கும் அஸ்வினி என்ற நட்சத்திரத்தில் இருக்கும் போதே தமிழ் புத்தாண்டு ஏற்படுகிறது. அஸ்வினி என்ற நட்சத்திரம் குதிரை வடிவம் கொண்டது. சூரியன் எனும் அரசன் குதிரை (அஸ்வினி) மேல் பயணம் செய்கிறார் என்ற உவமையும் இங்கே செய்து பார்க்கலாம்

இந்த புத்தாண்டு தமிழகத்திற்க்கு எப்படி பலனளிக்கப் போகிறது ? …

இந்த விளம்பி ஆண்டில், தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நடக்கும்!

இந்த விளம்பி வருடம் அதாவது  14/4/2018 முதல் 2019 ஏப்ரல் 13ம் தேதி வரை இந்தக் காலகட்டத்தில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கும்.

அதேசமயம் போதுமான அளவுக்கு மழை இருக்கும் ஆனால், மழையால் சேதங்களோ பாதகங்களோ ஏற்படாது. முக்கியமாக இந்த விளம்பி வருடத்தில், விவசாயம் செழிக்கும். பொருளாதாரம் ஏற்றம் பெறும்.  இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் உயரும்!

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று – தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும். நல்ல திறமையான ஸ்திரமான ஆட்சி நிர்வாகம் அமையும். தனிநபர் வருமானம் உயரும்~

அவரவர் இல்லத்தில் சுபீட்சம் மலர … மங்களம் பெருக…  இல்லத்தில் உள்ள அனைவரும் சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தினசரி தளத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜெய் ஶ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe