spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா

வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா

- Advertisement -

nami nandi adigal nayanar guru pooja

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”…..

“நமிநந்தியடிகள் குருபூஜை” & “பேரொளி வழிபாடு” :30-5-17…”ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்”..

சேலத்தில் இருந்து 25 கிமீ…ஆலய தொடர்புக்கு:9443515036..

திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்.[நமிநந்தியடிகள் பிறந்த ஊர்  திருஏமப்பேரூர்[திருநெய்பேர்].]..ஒருநாள் வீட்டிற்குச் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற நேரம் இல்லாது போயிற்று. உடனே அவர் கோயிலுக்கு அருகில் குடியிருந்த சமணர்களிடம்
நெய் தந்திடக்கோரி வேண்டினார். மறுத்து விட்டனர் சமணர்கள்..

“அக்னியையே கையில் ஏந்தியிருக்கிறாரே உங்கள் சிவபெருமான், அவருக்கு நெய்விளக்கு
எதற்கு?” என்று கேலி பேசினார்கள்.அப்போது சிவபெருமான், “கமலாலயக்குளத்து
நீரை இட்டு விளக்கு ஏற்றுக” என்று அசரீரியாக ஆணையிட்டார்.

உடனே நமிநந்தி அடிகளும் திருவாரூர் கமலாலயக் குளத்து நீரைக் கொண்டு கோயிலுக்குள்ளே
விளக்குகளில் விட்டு அவற்றை எரிய வைத்தார்.இதனைக்கண்ட சமணர்கள் சைவ
சமயத்தின் பெருமை உணர்ந்து சைவத்தை தழுவினர்..

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் ,”நமிநந்தி அடிகள் தினசரி தீபத் திருப்பணி சிவனடியார்
திருக்கூட்டம்”சார்பில், நீரால் விளக்கேற்றிய நமிநந்தி அடிகள், பெரிய
புராணம் பாடிய தெய்வச் சேக்கிழார் குரு பூஜை மற்றும் நமிநந்தி அடிகள் தீபப்பேரொளி விழா,
30-5-17அன்று நடக்கிறது.

அன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை, விநாயகர் மற்றும் கலச பூஜையும், உலக நன்மைக்காக யாக வேள்வியும் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர், கைலாசநாதர், அறம் வளர்த்த
நாயகி,சுப்ரமணியர், நந்தியம்பெருமாள், அறுபத்து மூன்று நாயன்மார்கள்,
மூலவர்,நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார், சோமஸ்கந்தர் ஆகியோருக்கு
திருமஞ்சனஅபிஷேகம் நடக்கிறது.

காலை 11 மணிக்கு, பேரொளி வழிபாடும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பக்தர்கள் கோவில் முழுவதும் அனைத்து சன்னதிகளிலும் திருவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள், நமிநந்தி அடிகள்,தெய்வச்சேக்கிழார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்..

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”..ஆம்!திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜோதி வடிவான நம் ஈசனை அன்பெனும் பிடிக்குள் சிக்கெனப்பிடித்து நம் மனதுக்குள் தந்தானன
தருவானை நாம் கேட்டு பெறு ஓம்.

ஆம்! தந்தானை துதிப்போம்..

கட்டுரையாக்கம்:அன்பன்.ப்ரியமுடன்:

சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம், 9787443462.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe