முதல் டெஸ்ட்: 304 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது இந்தியா

காலே:

காலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில், 304 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 600 ரன்களும் அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது.
இலங்கை முதல் இன்னிங்ஸில் 291 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களும் எடுத்தது. இதனால் இந்திய அணி 304 ரன்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான சுழற்பந்துவீச்சு காரணமாக அமைந்தது. இருவரும் இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: