இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா 622 ரன் குவிப்பு

கொழும்பு:
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்திருந்தது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி களம் இறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 128 ரன்(10 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 103 ரன் (12 பவுண்டரி) என வலுவான நிலையில் களத்தில் இருந்தனர். இன்று 2 ஆவது நாள் ஆட்டம் துவங்கியதும் மேலும் 5 ரன்கள் சேர்த்த நிலையில் 133 ரன்னுடன் புஜாரா ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரஹானே 29 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அஷ்வின்(54 ரன்), சகா(67 ரன்) ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால், இந்திய அணி 600 ரன் சேர்த்தது. ஜடேஜாவும் 70 ரன் குவித்து உதவ, இந்திய அணி 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்திருந்த போது, கேப்டன் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இலங்கை அணி தரப்பில் ஹெராத் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸைத் துவக்கியது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. தரங்க ரன் ஏதும் எடுக்காமலும், கருனரத்ன 25 ரன் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி முதல் 33 ரன்களில் 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இரண்டு விக்கெட்களையும் அஸ்வின் வீழ்த்தினார். களத்தில் மெண்டிசும், சண்டிமாலும் இருந்தனர்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் சேர்ந்து 572 ரன் முன்னிலை பெற்றி

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: