spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்மீண்டும் கணினி வைரஸ் தாக்கும் அபாயம்: அச்சத்தில் உலக நாடுகள்!

மீண்டும் கணினி வைரஸ் தாக்கும் அபாயம்: அச்சத்தில் உலக நாடுகள்!

- Advertisement -

மீண்டும் அலை அலையாகத் தொடரக்கூடிய இணையத் தாக்குதலுக்கு தாம் இலக்காகிவிடுவோமோ என்ற அச்சத்தில் அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.
கடந்த வெள்ளி அன்று, உலகு எங்கும் லட்சக்கணக்கான கணினிகளை வைரஸ் தாக்கியது. கணினி வைரஸின் பரவலால், கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் கூறுகின்றன. நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்தாலும், இந்தத் தாக்குதலை ஒரு அபாயகரமான எச்சரிக்கை மணியாகக் கொள்ள வேண்டும் என்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இதனால் மீண்டும் கணினி வைரஸ் தாக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் பல இருப்பதாகக் கூறப்படுகிறது.

***

கணினி தொழில் நுட்ப வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரும் சைபர் தாக்குதலை ஒரு Ransom ware கடந்த இருநாட்களில் நிகழ்த்தியுள்ளது. 48 மணி நேரத்தில்150 நாடுகளுக்கு பரவி சுமார் 2,30000 கணினிகளை போட்டு புதைத்திருக்கிறது இந்த வைரஸ், கணினிகள் மட்டுமல்லாமல் மருத்துவமனைகளின் MRI Scanners, Blood Storage refrigerators போன்றவற்றையும் தாக்கி ஆளும் அரசுகளை அலற செய்ததிருக்கிறது. Fedex, LATAM Airlines , National Health Service of Britain, Minitry of internal affairs – Russia மற்றும் இதே போன்ற 100 அதிமுக்கிய உலக நிறுவனங்களையும் கதற வைத்துள்ளது இந்த வைரஸ்,

Wannacry, or WCRY, Wannacrypt என்ற பெயரில் பரவி வரும் இது ஒரு Ransomware , ஆம் உங்கள் கணினியில் நுழைந்த அடுத்த நொடி உங்கள் கோப்புகள் அத்தனையும் (Including hidden Videos , Photos ) என்க்ரிப்ஷன் என்ற பெயரில் லாக் செய்து 300 டாலர் தந்தால் தான் கடத்திய பைல்களை விடுதலை செய்வேன் என்று பிணைய தொகை கேட்கும் மிரட்டல் பேர்வழி தான் Ransomware, ஆனால் 300 டாலர் மட்டுமல்ல மூன்று நாட்கள் Deadline சொல்லி அலறடிக்கிறது இந்த ரேன்சம்வேர், மூன்று நாட்களுக்கு பிறகு பிணையத்தொகை 600 டாலர் தந்தால் தான் கோப்புகள் விடுதலை நடக்கும். இதையும் தராவிட்டால் உங்கள் கோப்புகள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தைத்தான் இந்த வைரஸ் உள்நுழைகிறது, மெயில்கள் மற்றும் மெசேஜ்கள் இணைப்புகள் மூலம் மற்றும் இணைய டவுன்லோடிங் மூலமும் சில நாடுகளில் பரவியுள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த கடத்தல்களுக்கு கிடைத்த பிணையத்தொகை வசூல் 33000 டாலர்கள், Bitcoin மற்றும் Wallets வழியாக இந்த தொகை செலுத்தப்படுவதால் இதை யாருக்கு போகிறது என்பதை கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை!

கணினி தொழில் நுட்ப வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரும் தாக்குதல் இது என Europol நேற்று பிபிசி யில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது, இந்த வைரஸை அழிக்க Kill switch இருந்தாலும் இன்னும் 24 மணிநேரத்தில் Kill switch எதுவும் இல்லாத முறையில் இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டு “ என்ன யாராலயும் அழிக்க முடியாது” என எந்திரன் சிட்டியாய் இது பரவும் என்பதுதான் தொழில்நுட்ப உலகையே அதிர செய்துள்ள தற்போதைய செய்தி , இப்போதைக்கு எல்லா நாடுகளும் கையை பிசைந்து கொண்டு செய்வதறியாமல் தவிக்கின்றன, கையை பிசைவது மட்டுமே எப்போதும் செய்யும் இந்தியா இந்த பஞ்சாயத்து நிழலில் துண்டை விரித்து படுத்திருக்கிறது. ஆகவே நண்பர்களே உங்கள் கணினி , மொபைல் எந்த நொடியும் தாக்குதலுக்கு ஆளாகலாம் , அதை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது மெயிலில் வரும் தேவையற்ற இணைப்புகளை தொடாதீர்கள், வாட்சப் , மெஸ்சேன்ஜ்ர் எல்லாமும் சேர்த்துதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe