ரோஹிங்யா அகதிகள் நிலை: உலுக்கிய புகைப்படம்

மியான்மரில், அரசுத் தரப்புக்கும் ரோஹிங்யா இஸ்லாமிய குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மியான்மரில் வசித்து வந்த லட்சக்கணக்கான ரோஹிங்யா மக்கள், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

மியான்மர் ராணுவத்தினர், ரோஹிங்யா மக்கள் வசிக்கும் கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்துவதால், பலர் தங்கள் உடைமைகளை இழந்து உயிருக்கு அஞ்சி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மியான்மரில் இருந்து நஷீர் அகமது என்பவர் மனைவி ஹமீதா மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் வங்தேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். படகில் மேலும் 18 பேர் இருந்தனர். படகு கரையை எட்டுகையில் அலையில் சிக்கி நிலைகுலைந்தது. இதில், ஹமீதாவின் கையில் இருந்த பிறந்து 40 நாள்களே ஆன குழந்தை, தண்ணீருக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது. இறந்துபோன கைக்குழந்தையுடன் தாயும் தந்தையும் தவித்துநின்ற காட்சியை, ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் முகமது ஹூசைன் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம், சர்வதேச நாடுகளை அதிர வைத்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்யா போராட்டக்காரர்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் தொடங்கிய ஒரே வாரத்தில், 4 லட்சம் மக்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: