ஜெனிவா சாலையில் கம்பு சுத்திய வைகோ!

இதனிடையே எவரும் எதிர்பாராத வண்ணம், கூடாரம் அமைக்க பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு ஜெனிவா நகர வீதியில் வைகோ சிலம்பம் ஆடினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ உரையாற்றினார். வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்துக்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கினர்.

ஐநா., கூட்டத்தில் கலந்து கொண்ட பின், ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் போட்டு, ஈழ படுகொலை குறித்த புகைப்பட கண்காட்சியை அமைத்துள்ளார். இந்தக் கூடாரம் தினமும் காலையில் அமைக்கப்படும். இதில் பொது மக்கள் பார்வைக்கு புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. பின்னர் மாலை கூடாரம் அகற்றப்படும்.

இதனிடையே எவரும் எதிர்பாராத வண்ணம், கூடாரம் அமைக்க பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு ஜெனிவா நகர வீதியில் வைகோ சிலம்பம் ஆடினார். வைகோவின் இந்தச் சிலம்பாட்டம் அங்கிருப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: