அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலியான பின்னணியில் பெண்?

லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூடு; பெண்ணுக்கு தொடர்பு?

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மேண்டலே பே ஓட்டல் அருகில் உள்ள மைதானம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டலின் 32 வது மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர், இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 50 பேர் பலியாயினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஸ்டீபன் படாக், 65 என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரைணையில், மரிலோ டேன்லி, 62 என்ற பெண்ணிற்கு துப்பாக்கிச்சூட்டில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவர் அங்குள்ள கேஸினோவில் பணியற்றிவருகிறார். சம்பவம் நடந்த போது அங்கு இல்லை. இவருக்கும் ஸ்டீபன் படாக்கிற்கும் தொடர்பிருக்கலாம் எனவும், ஸ்டீபன் படாக்குடன் ஒன்றாக இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே அறையில் தங்கியிருந்ததும், என்ற சந்தேகம் உறுதியாகியுள்ளது.இதையடுத்து மரிலோ டேன்லி பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவுதேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிட டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்:அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மேண்டலே பே ஓட்டல் அருகில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந் போது ஓட்டலின் 32 வது மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர், இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 50 பேர் பலியாயினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது. தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அதிபர் மாளிகையில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அக்.4 ம் தேதி செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: