உனக்கான கவிதை இது…!

உனக்காக நான் எழுதும்
உள்ளக் குமுறல்கள்…
படித்தவரின் பாராட்டைப்
பெற்று விடுகின்றன…
நீயோ…
பாராமுகத்துடன் நழுவுகிறாய்…
பார்! பார்…!
உன்னில் இருந்து வெளிப்படும்
வார்த்தைகளுக்காய்…
உள்ளம் காத்திருப்பில்!
அதுவரைக்கும்
என் வார்த்தைகள்
வளர்ந்து கொண்டேயிருக்கும்!