போதை எதிர்ப்பு ?

இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்!
நான் இதை
கடைப்பிடிக்கப் போவதில்லை!
கன்னத்தில் குழிவிழ
பூவிதழ் புன்னகையேந்தி…
கலகலப்பூட்டும்
அவளின் வெள்ளந்திச் சிரிப்பு…
என் மனசில் ஏற்றும் ஒரே போதை!
நான் ஏன் அதை எதிர்க்க வேண்டும்?