காக்க காக்க கூட்டணி காக்க…

இப்படி ஒரு நிலையாச்சுதே… பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்… இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு… நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?

ஆமாங்கய்யா சொன்னானுங்க…
என்னது?
பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!
இது எதுல இருக்கு?
ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது…
அதுல என்ன பேருல இருக்கு?
நொந்த வேச்டி கவசம்னு இருக்கு!
இதைப் படிச்சா…
எல்லாம் சரியாயிடுமாம்!
அப்படியா…  எங்க படி…பாக்கலாம்!

ம்ம்ம்ம்…படிக்கிறேன்…
கோச்டியை கொஞ்சம் கலைச்சேவிட்டு
கச்டங்களைச் சொல்லி கண்ணு கலங்கணும்
காக்க காக்க களகம் காக்க
நாக்க அடக்கி நயமா வெக்கணும்
காக்க காக்க கூட்டணி காக்க
சேக்கா போட்டே சரண்டர் ஆவணும்
சேச்சீ சேச்சீ சீச்சீ சீச்சீ
ஜெஜ்ஜே ஜெஜ்ஜே.. சீச்சீ சீச்சீ
டூஜி பாஜி போஜி போஜி
சோனிஜி மன்னுஜி ஜேஜே ஜிஜி
நோக்க நோக்க வழக்குகள் நோக்க
சீப்பி ஐயை சிதறே அடிக்க
தாக்க தாக்க பிளாக் மெயிலாலே
பாக்க பாக்க பதவியப் பாக்க
தோக்க தோக்க கேசெல்லாம் தோக்க
கெக்கே பிக்கே காங்கிரசு காக்க
நம்பிக் கிட்டே தினமிதை ஓத
பகுத்தறி வெல்லாம் பழசாப் போக
ராவா ராவா ராவண வாரிசா
தாவா தாவா எல்லாந் தாவா
மாவா மாவா எல்லாம் மாவா
போவ போவ பொடிப்பொடி யாக………..