அழைப்பது எப்படி?

தாயின் தமிழ்ப் பற்று
அம்மா என அழைக்கச் சொன்னாள்…

அப்பாவின் ஆங்கில மோகம்
மம்மி என அழைக்கச் சொன்னார்…

குழப்பத்தில் தவித்த குழந்தை
அம்மி என அழைத்தது…

அட, எவ்வளவு பொருத்தம்!
அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?