தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி

03 July30 Modiதொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். இந்நிலையில், லக்னோவில் ரூ.60 ஆயிரம் கோடிமதிப்பிலான 81 திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் தொழிலதிபர்கள் பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, கவுதம் அதானி, எஸல் குழுமத்தலைவர் சுபாஷ் சந்திரா, ஐடிசி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் பூரி உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள், விஜபிக்கள் பங்கேற்றிருந்தனர்.

மத்தியில் ஆளும் பாஜக கட்சி, தொழிலதிபர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறது, மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கு இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்