குழந்தை பிறப்பு ஒரு சூக்ஷுமம் – ஒரு பார்வை
5ல் ராகு/கேது பாபகிரஹங்கள் தோஷங்கள் இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
5ல் ராகு/கேது இருக்கும் பல ஜாதகங்கள் அதிக குழந்தைகள் இருக்கிறது. 5ல் சுப கிரஹங்கள் இருந்து 5க்குடையவரும் சுபமாய் இருந்தும் குழந்தையே இல்லை
சிலருக்கு 10வருடம் ஆகியும் குழந்தை இருக்காது மருத்துவர்கள் ஆரோக்கியம் குழந்தை பிறக்க வாய்ப்பு என்பர்.
முதலில் குழந்தை பிறக்க உதவும் முக்கிய கிரஹங்கள் சந்திரன் செவ்வாய்.
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் இயல்பாக வரும் மாதவிடாய் அந்த நாளில் இருந்து 5வது நாள் முதல் 13வது நாட்களுக்குள் கணவனின் சேர்க்கை ஏற்பட்டால் குழந்தை உண்டாகிறது.
பெண்ணின் ஜென்ம ராசியில் இருந்து அந்த மாதவிடாய் ஆன நாளில் ஆரம்பித்து ராசியில் ராசிக்கு 2,4,5,7.8.9,12 இடங்களில் சந்திரன் சஞ்சரித்து செவ்வாயால் பார்க்க பட்டால் நிச்சயம் குழந்தை உருவாகும். அதே நேரத்தில் கணவனின் ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 3,6,10,11ல் சந்திரன் வரும்போது அவர் குருவால் பார்க்க பட்டால் நிச்சயம் குழந்தை உண்டு.
இப்படிப்பட்ட கிரஹ நிலையில் கணவன் மனைவி சேர்ந்தால் நிச்சயம் குழந்தை உண்டாகும்.
இந்த கணக்கை சரியாக போட்டால் துல்லியமாக குழந்தை உண்டாகும் நாளை சொல்லலாம்.
இதில் இன்னொன்றும் இருக்கு சிலருக்கு திருமணம் தாமதம் ஆகும் அதற்கு காரணம் திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்கனும் என்பது விதி அந்த குழந்தை பிறக்கும் காலம் வரும் வரை திருமணம் தாமதம் ஆகும்.
- ஜோதிடர் லட்சுமிநரசிம்மன்