ராகு காலத்தில் செய்யும் செயல் யாருக்கு நன்மை அளிக்கும் ?
-ஜோதிடர் லக்ஷ்மி நரசிம்மன்
சிலர் சொல்லுவர் ராகு காலத்தில் தொடங்கினேன் எனக்கு சக்ஸஸ் ஆயிற்று என்பர். இதில் இரண்டு வகை
1) பகுத்தறிவுவாதிகள் நம்பிக்கை அற்றோர் என்போர். பொதுவா வெள்ளிக்கிழமை 10.30 – 12.00 மணிக்கு என்று காலெண்டரில் போட்டிருக்கு இவர் சரியாக 10.30க்கு ஆரம்பித்தார். இங்கு கவனிக்க வேண்டியது அவர் ஆரம்பித்த ஊரில் சூரியோதயம் அன்று 06.35மணிக்கு அதனால் அன்றைய அந்த ஊர் ராகு காலம்
11.05மணிக்கு அவர் ஆரம்பித்த வேளை நல்ல நேரம்.
2) இன்னொருவர் நிஜமாகவே 11.05க்கு ஆரம்பிப்பார் சக்ஸஸ் ஆகி இருக்கும். காரணம் ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த நக்ஷத்திரம் கிரஹ பலம் இவற்றை கொண்டு ராகு நன்மை செய்வதாய் இருக்கும் ஜாதகப்படி அதனால் அவருக்கு ராகு கால வேளை பாதிப்பை தராது.
பொதுவாக இந்த ராகு காலம் எமகண்டம், குளிகை மற்றும் சில தியாஜ்யம் விஷ கடிகை என்று 24மணி நேரத்தில் குறிப்பிட்ட காலங்கள் இவைகள் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் 02.15 மணி நேரம் பகலிலும், இரவில் 02.15மணி நேரமும் மட்டுமே நல்ல நேரம். அதை அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.