![குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): கடகம் - Dhinasari Tamil குரு பெயர்ச்சி](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2021/04/gurupeyarchi-2021-2022.jpg?ssl=1)
குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை
நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.
வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.
அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.
வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்
குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!
குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : [email protected]
கடகம்
புனர்பூசம் 4ம் பாதம்,
பூசம் 4 பாதம்
ஆயில்யம் 4 பாதம் முடிய)
கடக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு எட்டில் பெயர்ச்சியாகிறார் குரு பகவான் அட்டம குரு கஷ்டத்தை கொடுக்கும் என்பார்கள் ஆனால் கோச்சார நிலைகள் நன்றாக இருக்கிறது அதனால் குரு பகவான் 12ஆம் இடம் 2ம் இடம் மற்றும் 4ம் இடம் இவற்றை பார்ப்பதால் சுப விரயங்கள் சுப செலவுகள் மற்றும் குடும்பத்தில் நல்ல நிலை தாயாரின் நல்ல நிலை என்று முன்னேற்றமாகவும், வீடு, நிலம் போன்றவைகள் நன்றாக இருக்கும்
பொதுவில் ஜீவன ஸ்தானம் நிச்சயம் நன்றாக இருக்கும் காரணம் பத்துக்குடைய செவ்வாய் நட்சத்திரத்தில் குரு இருப்பதால் அடுத்த 144 நாட்கள் நன்றாக இருக்கும் பொருளாதாரம் ஏற்றம் பெறும் வேலையில் முன்னேற்றம் இருக்கும் சொந்த தொழிலில் வருமானம் அதிகரிக்கும் சிலருக்கு புதிய வெளிநாட்டு அல்லது வெளியூர் வேலையும் கிடைக்க வாய்ப்புண்டு.
இன்னுமொரு காரணம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10-ஆம் இடத்துக்கு ராகு பெயர்ச்சி ஆவது இரட்டிப்பு வருவாயை தரும் நன்மைகள் அதிகம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் அதேநேரம் சில சங்கடங்கள் அல்லது ஏமாற்றங்கள் உருவாக வாய்ப்புள்ளது காரணம் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சஞ்சாரம் இவை உடல்ரீதியான படுத்தல் அல்லது உறவுகளால் வைத்திய செலவு போன்றவையும் வீடு, நிலம் போன்ற விஷயங்களில் மெதுவாக முன்னேற்றமும் வழக்குகள் ஏற்படக்கூடிய நிலையும் இருக்கிறது கவனம் தேவை
புதன் 6ல் வரும்போது (ஜனவரி பிப்ரவரி மாதங்களில்) மனதில் குழப்பம் ஏற்பட செய்யும் அதனால் சிறு சிறு பாதிப்புகளும் ஏற்படும். பொதுவில் கலந்து கட்டி நன்மைகள் இருக்கும். தனிப்பட்ட ஜாதகத்தில் கிரஹநிலைகள் வலுவாக நன்மை தருவதாக இருந்தால் கவலை வேண்டாம் பெரிய துன்பங்கள் இருக்காது.
குடும்பம் : குரு பகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுக ஸ்தானத்தையும் பார்ப்பது மன அமைதியைத் தரும் கணவன் மனைவி இடையே கடந்தகால கசப்புகள் நீங்கி ஒற்றுமை பெருகும் இல்லத்தில் திருமணம் குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் அன்பும் ஒற்றுமையும் பெருகி இருக்கும் பெரிய துன்பங்கள் கிடையாது சிலருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடிவரும் வேறு வீடு வாங்கி அதில் குடி போகும் பாக்கியம் உண்டாகும் தனிப்பட்ட ஜாதகங்கள் கிரக நிலைகள் சாதகமாக இருந்தால் தற்போது நன்மைகள் அதிகமாக உண்டாகும் மேலும் பிள்ளைகள் மூலம் நன்மை அதிகம் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்
ஆரோக்கியம்: 6ம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் ஒன்பதில் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும் தாய் தந்தையரின் நாள்பட்ட வியாதிகள் குறைய ஆரம்பித்து மருத்துவச் செலவுகள் குறையும் வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும் பொதுவில் இல்லத்தில் நல்ல சூழல் இருப்பதால் குடும்ப உறவுகள் அனைவரது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் இந்த குருபெயர்ச்சி நன்மை தருவதால் ஆரோக்கியம் மேம்படும்
வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: உண்ணாமுலை தாயார் உடனுறை அண்ணாமலையாரை வழிபடுவது, தட்சணாமூர்த்தி சுவாமியை வழிபடுவது அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது பழமையான கோயில்களில் உழவாரப்பணி செய்வது இவை நன்மையை தரும் மேலும் பசித்தவருக்கு உணவளிப்பது உடலால் பாதிப்படைந்த துயர் துடைப்பது இவை நன்மையை பெருக்கித் தரும்