குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை
நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.
வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.
அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.
வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்
குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!
குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : [email protected]
துலாம் :
சித்திரை 3,4 பாதங்கள்
ஸ்வாதி 4 பாதம்
விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய
துலா ராசி அன்பர்களே உங்களுக்கு அடுத்த 144 நாட்கள் மிகுந்த நன்மை தருவதாக அமையும் காரணம் குரு பகவான் 5ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் மேலும் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார்
மற்ற கிரகங்களும் இந்த காலகட்டத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளே அதிகம் நடைபெறுகிறது மார்ச் 2022 முதல் ராகு ஏழிலும் கேது ஜென்மத்திலும் சஞ்சரிக்கும்போது சில செலவுகள் தர்ம சங்கடங்கள் வரும் மற்றபடி பெரிய தொல்லைகள் இருக்காது பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருக்கிறார் அதனால் உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும்
வேலைவாய்ப்புகள் மிக நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடந்தகால முயற்சிகளின் பலனை அனுபவிப்பார்கள் நல்ல உத்தியோகம் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்று இருக்கும் சொந்தத் தொழில் செய்வோர் புதிய தொழில் விஸ்தரிப்பு களை செய்ய ஆரம்பிக்கும் காலம் இது அதில் மிகப்பெரிய நன்மைகளை பெற்று அடுத்து வரும் காலங்களில் மிக உயர்ந்த நிலையை அடைவர்
பொருளாதாரம் பணப்புழக்கம் மிகுந்த ஏற்றமாக இருக்கும் மற்ற பிரிவினர் பெண்கள் மாணவர்கள் என்று அனைவருக்கும் இந்த குருபெயர்ச்சி உன்னதமான பலனை தருகிறது கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி சிலருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் குழந்தை எதிர்பார்த்து ஐந்தில் குரு இருப்பதால் புத்திர பாக்கியம் இப்பொழுது ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
உறவுகளால் நன்மை உண்டாகும் 9-க்குடையவர் ராசியில் இருப்பது நான்கு உடையவர் ஆட்சியாக இருப்பது பெற்றோர் வகையில் நன்மைகளை அதிகரிக்கவும் மேலும் அவர்களுடைய வைத்திய செலவுகள் குறைய ஆரம்பிக்கும் சிலருக்கு புதிய வீடு வாகனம் ஆடை ஆபரணச் சேர்க்கை என்று நன்றாக இருக்கும் கடந்த காலங்களில் செய்த முயற்சிகளின் பலன்கள் வெற்றியாக தற்போது கிடைக்கும்
தொல்லைகள் என்று சொன்னால் கடந்தகாலத்தில் சம்பாதித்த எதிரிகளை விட்டுவிட்டதால் அவர்களால் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு எதிலும் கவனமாக செயல்பட்டு கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் நன்மை அதிகமாக உண்டு
இந்த குருப்பெயர்ச்சி பெரும்பாலும் நன்மைகளையே செய்வதால் சிறுசிறு சங்கடங்கள் மட்டுமே தருவதால் நன்மை உண்டாகும் பெயர்ச்சியாக இதை கொள்ளலாம்
குடும்பம் : இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் புரிந்துகொண்டு அனுசரித்துப் போவதால் அதிக நன்மை இருப்போம் மேலும் பெற்றோர் குழந்தைகள் மற்ற உறவுகள் எல்லோரிடமும் அன்பு காட்டுவதால் அவர்களால் நன்மை உண்டாகும் தடைபட்ட அல்லது தாமதமான திருமண முயற்சிகள் இப்பொழுது கைகூடி இல்லத்தில் புதிய வரவுகள் உண்டாகும் குழந்தைப் பேறு வேண்டி தவம் இருந்தவர்கள் இந்த குரு பெயர்ச்சியில் அதை பெற்று மகிழ்வார்கள் பொதுவில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நன்மை அதிகமாக இருக்கும்
ஆரோக்கியம் : காற்று ராசியான துலா ராசி அன்பர்கள் 6க்குடைய குரு பகவான் 5ல் சஞ்சரிப்பதும் 6-ஆம் இடத்துக்கு சனி பார்வை இருப்பதும் எலும்பு வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சிலருக்கு உஷ்ணத்தினால் பாதிப்புகளும் உண்டாகலாம் வாழ்க்கை துணைவருக்கும் இதேபோல் இருந்து வைத்திய செலவுகள் அதிகரிக்கலாம் உணவில் கவனம் தேவை, பெற்றோர் வழியில் சிலவுகள் குறைந்துவிடும். கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும் ஆரோக்கியம் மேம்படும்
வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : லட்சுமி நரசிம்மர் மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வார் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது கூடுமான வரையில் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது நன்மை தரும் அதேபோல் முடிந்த அளவு வறுமை பாதித்தவர்களுக்கு உணவு உடை கல்வி இவற்றை வழங்குவது மிகுந்த நன்மை தரும்