குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை
நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.
வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.
அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.
வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்
குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!
குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : [email protected]
கும்பம்
அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4 பாதம்,
பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய
கும்ப ராசி அன்பர்களே உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கிறார் அடுத்த 144 நாட்களுக்கு. ஜென்ம குரு சிறைவாசம் என்பர் இதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு கட்டிப்போட்ட நிலை சிறைவாசம் ஒரே இடத்தில் இருக்கிறது அங்கிருந்து வெளியே வர முடியாது அப்படி ஒரு நிலை அதாவது உங்கள் முயற்சிகள் தாமதமாக நடக்கும்
மேலும் இந்த குரு பெயர்ச்சி சமயத்தில் மற்ற கிரகங்கள் என்று பார்க்கும்போது ராகு சுக்கிரன் புதன் இவர்களின் சஞ்சாரங்கள் ஓரளவுக்கு நன்மை செய்கிறது பணத்தேவைகள் பூர்த்தியாகும் மேலும் ராகு மார்ச் 2022 முதல் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல நிலையை உண்டாகும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக வாய்ப்புகள் இருக்கு மேலும் மற்ற கிரக நிலைகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும் 10-ஆம் இடத்துக்கு உடைய செவ்வாயின் சஞ்சாரம் அவ்வளவு சாதகமாக இல்லை வேலை இருக்கும் உழைப்பீர்கள் வருமானம் உயராது
புதிய வேலைக்கு முயற்சி செய்தால் தாமதமாக கிடைக்கும் அதேநேரம் ஜனன ஜாதகத்தில் குரு மற்றும் 10-க்குடையவர் வலுவாக இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை பணத்தேவைகள் பூர்த்தியாகும் ஆனால் அது உடனே அல்ல கொஞ்சம் தாமதத்துக்கு பின் கடும் முயற்சிக்குப் பின் காரணம் கிரக நிலைகள் பெரிய அளவில் சாதகமாக இல்லை அதனால் இன்று கிடைக்க வேண்டியது ஒரு வாரம் கழித்து கிடைக்கும் அவ்வளவுதான்
சொந்த தொழில் செய்வோர் புதிய முயற்சிகளை நன்கு யோசித்து செய்வது கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பது. அரசோடு இணக்கமாக செல்வது என்று இருந்தால் பிரச்சனைகள் குறைவாக இருக்கும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கூட இது பொருந்தும்.
சில மனக்கசப்புகள் நண்பர்களால் உடன் வேலை செய்வோரால் உறவுகளால், தொழில் கூட்டாளிகள் வேலைக்காரர்கள் என அனைவராலும் பிரச்சனை உண்டாகலாம்.மேலும் வார்த்தைகள் விடுவதில் கவனம் தேவை எதிலும் நிதானம் விடாமுயற்சி நேர்மை மிக முக்கியம் இவை இருந்தால் ஓரளவுக்கு நன்மைகள் இருக்கும் வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை குடும்ப ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரும்
அதுவும் வீடு நிலம் சம்பந்தமாக சகோதர வகையால் துன்பம் வரலாம் கவனம் தேவை பொதுவில் இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமும் இருக்கிறது பாதகமும் இருக்கிறது உங்களுடைய நிதானம் பொறுமை நேர்மை மற்றும் கடின உழைப்பு இவற்றைப் பொறுத்து நன்மை தீமை அளவு கூட குறைவு என்று இருக்கும். மௌனம் காப்பது நல்லது
குடும்பம்: குடும்பத்தில் அமைதி இருக்கும் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனால் பிரச்சனைகள் வராது இருந்தாலும் நீங்கள் விட்டுக்கொடுத்துப் போனாள் வாழ்க்கைத் துணையோடு மட்டும் அல்லாது குடும்ப உறவுகள் மற்றும் அக்கம்பக்கத்தார் இவர்களோடு கூட அனுசரித்துப் போவது நன்மை தரும் இரண்டாம் இடத்துக்கு உடையவர் உங்கள் ராசியில் இருப்பதால் உங்கள் கருத்துகள் மெதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் அதனால் பொறுமை நிதானம் தேவை சுமாராக இருப்பதால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் குடும்பம் நன்றாக இருக்கும். பெற்றோரை வணங்குவது ஆலோசனை பெறுவது நன்மை தரும்.
ஆரோக்கியம் : பலரால் மனவருத்தங்கள் உண்டாகி ஒரு சோர்வைத் தரும் இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் மேலும் ஆறுக்கு உடையவர் வலுவற்ற நிலையில் இருப்பது வாழ்க்கை துணைவர் மற்றும் குடும்ப உறவுகள் மூலமும் வைத்திய செலவுகள் உண்டாகும் நிதானித்து செயல்பட்டால் ஆரோக்கியம் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவு செய்யாமல் எதையும் கலந்து பேசி முடிவெடுப்பதால் மனம் நிம்மதியை அடையும் அதன் மூலம் ஆரோக்கியம் கூடும். தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்று அதன் படி நடப்பது நல்லது.
வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன், இந்த தெய்வங்களை வழிபட்டு அம்மனுக்கு உரிய ஸ்லோகங்களை சொல்வது கோயிலில் விளக்கேற்றுவது நன்மை தரும் முடிந்தவரையில் தானதர்மங்கள் செய்வது நல்லது இறைவனை கெட்டியாக பிடித்துக் கொள்வது துன்பத்தில் இருந்து காக்கும்