சித்திரை நட்சத்திர பலன்கள்

அசுவினி முதல் எண்ண வரும் நட்சத்திர வரிசையில் பதினான்காவது நட்சத்திரம் சித்திரை. செவ்வாயின் நட்சத்திர வரிசையில் மிருகசீரிஷத்திற்கு அடுத்தப்படியாக வரும் இரண்டாவது நட்சத்திரம் சித்திரை. முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும், மீதம் உள்ள இரண்டு பாதங்கள் துலாம் ராசியிலும் வருகிறது. அழகியல் ரசனை மிகுந்த துலாமிலும், அறிவாற்றல் நிறைந்த கன்னியிலும் கலந்து வருவதால், கலையார்வம் மிக்கவர்களாகவும், அறிவாற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.